உலக விளையாட்டு செய்திகள்

கத்தார் கலக்கல்

சபா அல்-சலேம்: குவைத்தில், ஆசிய ஹேண்ட்பால் சாம்பியன்ஷிப் 22வது சீசன் நடக்கிறது. லீக் போட்டியில் ஓமன், கத்தார் அணிகள் மோதின. கத்தார் அணி 27-15 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. மற்றொரு லீக் போட்டியில் ஜப்பான் அணி 45-23 என ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. சவுதி அரேபிய அணி 24-22 என, ஈரானை வென்றது.

நேபாளம் அபாரம்

பாங்காக்: தாய்லாந்தில், தெற்காசிய புட்சல் கால்பந்து சாம்பியன்ஷிப் முதல் சீசன் நடக்கிறது. லீக் போட்டியில் நேபாளம், இலங்கை அணிகள் மோதின. இதில் நேபாளம் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

எவர்டன் கோல் மழை

பர்மிங்ஹாம்: இங்கிலாந்தில், பெண்களுக்கான எப்.ஏ., கோப்பை கால்பந்து 56வது சீசன் நடக்கிறது. பர்மிங்ஹாமில் நடந்த 4வது சுற்று போட்டியில் வெஸ்ட் பிரோம்விச் ஆல்பியன், எவர்டன் அணிகள் மோதின. இதில் கோல் மழை பொழிந்த எவர்டன் அணி 5-0 என வெற்றி பெற்றது.


எக்ஸ்டிராஸ்

* நியூசிலாந்தில் நடக்கும் ஏ.எஸ்.பி., கிளாசிக் ஆக்லாந்து ஓபன் டென்னிஸ் இரட்டையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி, சுவீடனின் கோரன்சன் ஜோடி 4-6, 6-4, 8-10 என ஆஸ்திரியாவின் அலெக்சாண்டர் எர்லர், அமெரிக்காவின் ராபர்ட் காலோவே ஜோடியிடம் வீழ்ந்தது.

* தாய்லாந்தில் நடக்கும் பாங்காக் ஓபன்-2 டென்னிஸ் இரட்டையர் பிரிவு பைனலுக்கு இந்தியாவின் அனிருத் சந்திரசேகர்-யுசூகி (ஜப்பான்), இந்தியாவின் ஸ்ரீராம் பாலாஜி-ஓபர்லீட்னர் (ஆஸ்திரியா) ஜோடிகள் முன்னேறின.

* அமெரிக்காவில் டெட்ராய்டில் நடக்கும் மோட்டார் சிட்டி ஓபன் ஸ்குவாஷ் காலிறுதியில் இந்தியாவின் ரமித் டான்டன் 0-3 (5-11, 6-11, 5-11) என எகிப்தின் யாஹ்யா எல்னாவாசனியிடம் தோல்வியடைந்தார்.

* குஜராத்தின் சூரத்தில் நடந்த இந்தியன் ஸ்டிரீட் பிரிமியர் லீக் ('டி-10') கிரிக்கெட் போட்டியில் சென்னை அணி (118/2), 38 ரன் வித்தியாசத்தில் ஐதராபாத் அணியை (80/7) வீழ்த்தியது.

Advertisement