ஐ.டி.எப்., டென்னிஸ்: பைனலில் ஜீவன்-ராம்குமார் ஜோடி
சென்னை: ஐ.டி.எப்., டென்னிஸ் இரட்டையர் பிரிவு பைனலுக்கு இந்தியாவின் ஜீவன், ராம்குமார் ஜோடி முன்னேறியது.
சென்னையில், ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர் நடக்கிறது. இரட்டையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் ஜீவன் நெடுஞ்செழியன், ராம்குமார் ராமநாதன் ஜோடி, நெதர்லாந்தின் மேக்ஸ் ஹூக்ஸ், நீல்ஸ் விஸ்கர் ஜோடியை சந்தித்தது. முதல் செட்டை 6-2 எனக் கைப்பற்றிய இந்திய ஜோடி, 'டை பிரேக்கர்' வரை நீடித்த 2வது செட்டை 7-6 என வென்றது.
ஒரு மணி நேரம், 22 நிமிடம் நீடித்த போட்டியில் ஜீவன், ராம்குமார் ஜோடி 6-2, 7-6 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று பைனலுக்குள் நுழைந்தது.
மற்றொரு அரையிறுதியில் இந்தியாவின் பிரஜ்வால் தேவ், நிதின் குமார் சின்ஹா ஜோடி 7-6, 6-7, 11-9 என்ற கணக்கில் ஜப்பானின் இச்சிகவா, இமாமுரா ஜோடியை வீழ்த்தியது.
ஒற்றையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் பிரஜ்வால் தேவ், நெதர்லாந்தின் மேக்ஸ் ஹூக்ஸ் மோதினர். இதில் பிரஜ்வால் 6-7, 4-6 என்ற நேர் செட் கணக்கில் தோல்வியடைந்தார். மற்றொரு காலிறுதியில் இந்தியாவின் சித்தார்த் ரவாத் 4-6, 4-6 என நெதர்லாந்தின் நீல்ஸ் விஸ்கரிடம் வீழ்ந்தார்.
மேலும்
-
காசி தமிழ்ச்சங்கமத்தில் கலந்து கொண்ட தமிழக இளைஞருக்கு பிரதமர் மோடி பாராட்டு
-
சிறுதானியத்தில் செய்யலாம் அத்தோ நுாடுல்ஸ், மோமோஸ்
-
இதை ஏற்றுக்கொள்ள முடியாது: டிரம்பின் வரி அச்சுறுத்தலுக்கு பிரான்ஸ், பிரிட்டன் எதிர்ப்பு
-
ஈரானில் ஆட்சி மாற்றத்திற்கான நேரம் வந்துவிட்டது; சொல்கிறார் டிரம்ப்
-
இன்று தை அமாவாசை; ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக்கடலில் பக்தர்கள் புனித நீராடி தர்ப்பணம்
-
கறிக்கோழி தொழிலுக்கு சிக்கல் உற்பத்தியாளர்கள் குமுறல்