ஹாக்கி இந்தியா லீக்: ராஞ்சி அணி வெற்றி

ராஞ்சி: ஹாக்கி இந்தியா லீக் போட்டியில் ராஞ்சி அணி 4-1 என, சூர்மா கிளப் அணியை வீழ்த்தியது.

ராஞ்சி, புவனேஸ்வர், சென்னையில், ஆண்களுக்கான ஹாக்கி இந்தியா லீக் (எச்.ஐ.எல்.,) 7வது சீசன் நடக்கிறது. ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் நடந்த லீக் போட்டியில் சூர்மா கிளப், ராஞ்சி அணிகள் மோதின. இதில் ராஞ்சி அணி 4-1 என்ற கோல் கணக்கில், 3வது வெற்றியை பதிவு செய்தது. ராஞ்சி அணிக்கு டாம் பூன் 2 (20, 22வது நிமிடம்), மன்மீத் சிங் ராய் (14வது), மன்தீப் சிங் (47வது) தலா ஒரு கோல் அடித்து கைகொடுத்தனர். சூர்மா கிளப் அணிக்கு ஜீத்பால் (52வது நிமிடம்) ஆறுதல் தந்தார்.
ராஞ்சி அணி இதுவரை விளையாடிய 5 போட்டியில், 3 வெற்றி, 2 தோல்வி என, 9 புள்ளிகளுடன் 3வது இடத்துக்கு முன்னேறியது.

Advertisement