திருப்பரங்குன்றம் தீபத்துாணில் தீபம் ஏற்ற வேண்டும்; தமிழக அரசின் அப்பீல் மனு டிஸ்மிஸ்
மதுரை: திருப்பரங்குன்றம் மலை தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று கோரிய வழக்கில், அரசின் மேல் முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தீர்ப்பை உறுதி செய்யும் வகையில் இரு நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் இன்று தீர்ப்பு வழங்கியது.
திருப்பரங்குன்றம் மலை உச்சியிலுள்ள தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்ற
வேண்டும் என, தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்தார்.
இதற்கு எதிராக, தமிழக அரசு மற்றும் தர்கா நிர்வாகம் தரப்பில் தாக்கல் செய்த
மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை, இரு நீதிபதிகள் அமர்வில் டிச., 18
ல் முடிந்தது. தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள்
ஒத்திவைத்திருந்தனர்.
இந்த வழக்கில் இன்று (ஜனவரி 06) காலை, 10:30
மணிக்கு நீதிபதிகள் ஜெயச்சந்திரன், கே.கே ராமகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய
அமர்வு தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பில் கூறியிருப்பதாவது:
* கோவிலுக்கு சொந்தமான இடத்தில் தான் தீபத்துாண் உள்ளது. தீபத்துாணில் தீபம் ஏற்றுவதால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் என்பது நகைப்புக்குரியது. தீபத்துாணில் தீபம் ஏற்றப்பட வேண்டும். சண்டை போடக்கூடாது. தீபம் ஏற்றும் போது பொதுமக்களை அனுமதிக்கக்கூடாது.
* திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தீபத்துாண் தர்காவுக்கு சொந்தமானது என்பதை ஏற்க முடியாது. அரசு தரப்பில் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன.
இவ்வாறு இரு நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் தீர்ப்பு அளித்துள்ளது.
@block_Y@
திருப்பரங்குன்றம் வழக்கு தேவையின்றி அரசியல் நோக்கில் பார்க்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்ட நிர்வாகம் தேவையின்றி பிரச்னையை உருவாக்கியுள்ளது. தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்தபோதே தீபம் ஏற்றி இருந்தால் இந்த பிரச்னை ஏற்பட்டு இருக்காது என்று நீதிபதிகள் தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்block_Y
சர்வே கல் ஈஸ்வரன் ஒரு காலனிய மறுபிறப்பு
பிரிட்டிஷ் அரசி மாதா கி ஜெய் விக்டோரியா மகாராணி வாழ்க
காலனிய ஆதிக்கத்தை எதிர்ப்பதாக மேடைக்கு மேடை முழங்கிக்கொண்டே, அதே காலனித்துவத்தின் மிச்சமான பழைய சர்வே கற்களுக்கு நீதிமன்ற வளாகத்தில் நாம் சல்யூட் அடித்துக் கொண்டிருக்கிறோம். இது ஏதோ நீதிமன்றத்தோடு நின்றுவிடவில்லை இந்தியாவின் பல கிராமப்புறங்களில், அடையாளம் தெரியாத பழைய பிரிட்டிஷ் சர்வே கற்களை GTS markers ஏதோ பண்டைய லிங்கம் என்றோ அல்லது எல்லைச் சாமி என்றோ நினைத்து, அதற்குப் பட்டையும் நாமமும் பூசி மக்கள் வழிபடும் அவலமும் ஆங்காங்கே நடப்பதுண்டு.
இந்தச் சூழலில், வந்திருக்கும் இந்த நீதிமன்றத் தீர்ப்பு மிக மோசமானது. இந்து மத நம்பிக்கைகளையும், தொன்மையான தமிழ் கலாசாரத்தையும் கேலிப்பொருளாக்கும் விதமாக இந்தத் தீர்ப்பு அமைந்துள்ளது. நமது உயரிய பண்பாடுகளை வெறும் காலனிய காலத்து அடையாளங்களோடு முடிச்சுப் போட்டு சிறுமைப்படுத்துகிறது.
இனி இந்த சர்வே கல்லை சர்வேஸ்வரா என்று பெயர் மாற்றிவிட்டால் போதும்—நமது ஊர் சங்கி கோத்திரங்களுக்கு ஒரு புது குலதெய்வமே கிடைத்துவிடும். நிர்வாகத்திற்காக ஆங்கிலேயன் நட்டு வைத்த கல்லை விழுந்து விழுந்து கும்பிடுவதையும், அதே சமயம் கலாசாரப் பெருமை பேசுவதையும் விட ஒரு முரண்பாடு இருக்க முடியாது. நமது கலாசாரத்தையே எள்ளி நகையாடும் ஒரு செயலை இவர்கள் புனிதமாகக் கொண்டாடுவதுதான் வேடிக்கை

அடுத்த கதவு உச்ச நீதிமன்றம் தான். அங்கே வழக்கை பதிவு செய்து விட்டு "வழக்கு நிலுவையில் இருப்பதால் விளக்கு ஏற்றுவது தீர்ப்பு வரும் வரை தள்ளி வைக்கப்படுகிறது" என்று அரசாணை போடுங்கள்.
அங்க போய் இந்த பாட்டை பாடினீங்க என்றால் அரசையே சட்டபடி ஆட்சி செய்யவில்லை என்று கலைத்துவிடுவாங்க .ஏனென்றால் இடைக்கால தடை இல்லை என்றால் அதை நிறைவேற்றி ஆகவேண்டும் .அது சரி வழக்கை விசாரணைக்கு எடுத்து தள்ளுபடி ன்று அறிவித்து விட்டால் என்ன செய்வீங்க அதுவும் தேர்தல் நேரத்தில் வரும்
இங்கு வெளியிடப்பட்ட பெரும்பாலான வாசகர்களின் கருத்துக்கள் தேர்தலில் பிரதிபலிப்பதில்லை. ஆகவே இங்கு பெரும்பான்மையினர் தமிழக அளவில் சிறிய எண்ணிக்கைதான்.
இந்த தேவையற்ற வழக்குக்காக ஆன செலவை வழக்கு போட்டவர்களிடமிருந்து வசூல் செய்து ஆரசு கஜானவில் சேர்க்க வேண்டும்.
கொஞ்சம் அரசு விட்டுக்கொடுத்திருந்தால் அசிங்கம் வந்திருக்காது.
நல்லது நடந்துள்ளது.
தமிழகத்தில் 30 சதவீத இந்துக்கள், விழிப்புணர்வு உள்ளவர்களாக இருந்தால் போதும். அதன் பின்னர் எந்த மாடலும் இங்கு ஆட்சி அதிகாரத்தில் இருக்க முடியாது. அதற்கான முயற்சியில் அனைவரும் ஈடுபட வேண்டும்.
1. ஒரு நல்ல ஆலோசனையை சொல்லியுள்ளீர்கள். எவ்வளவு சதவிகித விழிப்புணர்வு என்பது முக்கியமில்லை. விழிப்புணர்வு திமுக தொண்டர்களிடையே அவசியம் இனி மேல் ஏற்பட வேண்டும். கட்சியில் ஆட்சியில் குடும்ப ஆதிக்கத்திற்கு அவர்கள் முற்றுப் புள்ளி வைக்க வேண்டும். இந்த விழிப்புணர்வு இனிமேல் இன்னும் மக்களிடையே ஏற்பட வேண்டும். வளரவும் வேண்டும். 2. முதல்வர் அவர்கள் உச்ச நீதிமன்றத்திற்கு மனு செய்யப் போவதாக அறிவித்துள்ளார்களாம். அவர் மனு செய்யவேண்டுமென்றால் தனது சொந்தப் பணத்தில் போகட்டும். அரசு பணத்தில் கோயில் பணத்தில் அவர் கை வைக்கக் கூடாது. அவர் தமிழரென்றால் தன் தாய்மொழி தமிழ் என்றால் இந்த விபரித விளையாட்டை தமிழர்களின் உணர்வை சீண்டும் வகையில் சிறுப்பிள்ளைத் தனமாக விளையாடமாட்டார் என நம்புவோம். அவர் போடுகின்ற இந்த மனுவே அவரின் கடைசி மனுவாக இருக்கட்டும். வரும் சட்டமன்ற தேர்தலில் புதிய ஆட்சியை மக்கள் தேர்ந்தெடுக்கவேண்டும்.
மக்களே இந்த தீர்ப்பை திசை திருப்ப நாளைக்கு ஏதாவது இத்துப்போன ஒரு நடிகன் அல்லது நடிகையை வைத்து ஏதாவது சொல்லி திசை திருப்புவானுவ .. ஒரே சிந்தனை .. ஒரே நோக்கம் .. 2026 மே இவனுவலுக்கு சங்கு ஊதணும் ஜைஹிந்
அரசன் அன்றே கொள்ளுவான் இறைவன் நின்று கொள்ளும்