எல்லாப்புகழும் முருகனுக்கே... திருப்பரங்குன்றம் தீப வழக்கின் மனுதாரர் ராம ரவிக்குமார் மகிழ்ச்சி
நமது நிருபர்
திருப்பரங்குன்றம் மலை தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமி நாதன் தீர்ப்பை இரு நீதிபதிகள் அமர்வு உறுதி செய்த நிலையில், ''எல்லாம் புகழும் முருகனுக்கே...'' என வழக்கின் மனுதாரர் ராம ரவிக்குமார் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
தினசரி இந்த விஷயத்தை உலகிற்கு தெரிவித்த பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் நன்றிகள், வாழ்த்துக்கள். இந்த வழக்கு முருகன் அருளால் வெற்றிஅடைந்து இருக்கிறது. இந்த வெற்றி நிச்சயமாக மேலும் தொடரும் என்று நம்புகிறோம்.
அவதூறுகள்
இந்த வெற்றிக்காக போராடிய உள்ளூர் மக்கள், என்னை வெளியூர்காரர் என்று சொன்னார்கள். நான் மதுரைக்காரன் தான். உள்ளூர்காரன், வெளியூர்காரன் என்று பொய் வாதம் பரப்பினார்கள்.
வழக்கு தொடுத்தவர் மீதும், வழக்கிற்கு நீதி சொன்ன நீதிபதி மீதும் அவதூறு பரப்பினார்கள். நாங்கள் நீதிமன்றத்தின் உத்தரவை மதித்து, சட்டத்தின் பிள்ளையாக எந்தவித வார்த்தைகளையும் பேசவில்லை. இந்த நீதிமன்றம் இன்று தீர்ப்பு கொடுத்து இருக்கிறது. நீதிமன்றங்களின் உத்தரவுகளை நாங்கள் மதிக்கிறோம்.
மனசாட்சி
இந்த வெற்றியை திருப்பரங்குன்றம் மலை மீது உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும் என்பதற்காக போராடிய, திருப்பரங்குன்றம் மக்களுக்கும், இதற்கு முன்பு பலியான, எங்களது ஐயா ராஜகோபால், காளிதாசன், பரம சிவன் உள்ளிட்டோருக்கும் , இந்த நீதிமன்றம் உத்தரவை அமல்படுத்த வேண்டும் என்று தன்னுடைய உடலை இறைவனுக்கு அர்ப்பணித்த பூரண சந்திரனுக்கும் சமர்ப்பிக்கிறோம். எங்கள் பணி நிச்சயமாக தொடரும். அவதூறு பரப்பியவர்கள் மனசாட்சி படி நடந்து கொள்ளுங்கள்.
முருகனுக்கே
எல்லாவற்றையும் முருகன் பார்த்து கொண்டு இருக்கிறார். அவூதூறு பரப்பியவர்கள், அலட்சியமாக பேசியவர்கள், எங்களை அவமானம் படுத்தினீர்கள். அந்த அவமானங்கள் எல்லாத்தையும் அடித்து, உடைத்து, தகர்த்த முருகன் எங்களுக்கு வெகுமானம் தந்து இருக்கிறார்.
எல்லாப் புகழும் முருகனுக்கே, எல்லாம் புகழும் முருகனுக்கே, எல்லாம் புகழும் முருகனுக்கே. தமிழக அரசு அனைத்து மக்களுக்கு சாதகமாக இருக்க வேண்டும். மதச்சார்பற்ற அரசு ஆனால் ஹிந்துக்களுக்கு மட்டும் விரோதமாக இருந்தது.
சட்டத்தின் படி
தர்காவுக்கு 15 மீட்டர் தள்ளி தீபம் ஏற்றி கொள்ளலாம் என்று நீதிமன்ற தீர்ப்பு இருந்தும் மலை உச்சியில் தீபம் ஏற்றுவதால் சமூக நல்லிணக்கம் கெட்டு போய்விடும் என்று சொன்னார்கள். ஹிந்துக்கள் யாரும் முஸ்லிம்களுக்கு எதிராக இல்லை.
நீதிமன்றம் உத்தரவு கொடுத்த போதும் கூட நாங்கள் சட்டத்தின்படி தான் மதித்து போனோம். அப்படி இருக்கும் பட்சத்தில், மேல்முறையீடு என்று சொல்லி நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக வாதிட்டு, கோவிலுக்கு எதிராக, கடவுளுக்கு எதிராக, சமயத்திற்கு எதிராக வழக்கு நடத்தினர். இது ஏற்கத்தக்கது அல்ல. மக்களிடம் வெறுப்புணர்வை இந்த அரசு சம்பாதித்து இருக்கிறது. இவ்வாறு ராம ரவிக்குமார் கூறினார்.
2026 ல ரெண்டு சூர சம்ஹாரம் இருக்கும் ஒன்னு ஏப்ரல் மேவுலே தமிஷ்னாடு முஷுவதும் அப்புறம் தீபாவளிக்கு அப்புறம் திருச்செந்தூர்ல
நந்தவனத்திலோர் ஆண்டி அவன் நாலு வருஷமா இந்துக்களுக்கு எதிரா என்ன என்ன பண்ணணுமோ அதெயெல்லாம் பண்ணி கடைசியிலே முகத்துல கரிய பூசிக்ட்டாண்டி
இந்த தீர்ப்புக்காக மூர்க்கங்களால் படுகொலையான ராஜகோபால் அவர்கள் தொடங்கி, தனது உயிரை மாய்த்து கொண்ட பூரணச்சந்திரன் வரை அனைவருக்கும் உண்டான வெற்றி இது. அவர்களது ஆத்ம சாந்தி அடையட்டும். முருக பெருமான் அவர்கள் குடும்பங்களுக்கு நல்வழி காட்டட்டும்.
எவன் எவன் தீபம் ஏற்றுவதற்கு பொய் பித்தலாட்டம் செய்து தடையாக இருந்தானோ அவனையெல்லாம் தண்டிக்க வேண்டும். எம்பெருமான் முருகன் நிச்சயமாக தண்டிப்பார்.
"அருவமும் உருவமுமாகி அனாதியாய் பலவாய் ஒன்றாய் பிரமமாய் நின்ற சோதி பிழம்பதோர் மேனியாகி கருணைக் கூர் முகங்கள் ஆறும் கரங்கள் பனிரெண்டும் கொண்டே ஒரு திருமுருகன் தோன்றினான் உலகம் உய்ய" என்ற அருணகிரியார் திருப்புகழில் பாடியுள்ளார். இறைவன் அருவநிலையிலும் , அருவ உருவ நிலையிலும் மற்றும் என்றும் உள்ளவன் போன்றும் இந்த திருப்புகழ் பாடல் நமக்கு உணர்த்துகின்றது. ஆதலால் இப் பாடலை நாம் உலக தமிழ் நெஞ்சங்களுக்கு சமர்ப்பணம் பண்ணுவோம். இதற்காக நாம் இந்த திமுக வினரை பாராட்டாமல் இருக்க முடியாது. இப்படியொரு தீபத் தூண் விளக்கேற்றும் நிகழ்ச்சி காலம் காலமாக நடந்தது பலருக்கு தெரியாது. இப்போது தெரிந்து விட்டது. இதுவும் மிக மகிழ்ச்சிக்குரிய செய்தி. ஆதலால் இனிமேல் நம்முடைய தமிழ் நெஞ்சங்களில் நல்ல மறுமலர்ச்சியும் ஒற்றுமையும் புரிந்துணர்வும் ஏற்பட வேண்டும் மலரவும் வேண்டும் என நம்புவோம். "வாழ்க தமிழ், வளர்க தமிழ."
நண்பர்களே ......... கார்த்திகை கிருத்திகை நட்சத்திர நன்னாளில் அங்கே கந்தனுக்கு தீபம் ஏற்ற வேண்டியது அவசியம் .... திராவிட மாடல் அதைத் தடுத்துவிட்டது ..... இனி தீர்ப்பு எப்படி வந்து என்ன பயன் >>>>
இனிய இதை வைத்து அரசியல் செய்ய முடியாது வேறு கோவில் தான் பார்க்க வேண்டும் என்று தொண்டர்கள் கூறுகின்றனர்.
சிவநாயகம் அந்த அலுமினிய தட்டுடன் வேறு கோயிலுக்கு போகுமாறு மக்கள் கேட்கின்றனர்
தீய சக்தி ஒழிக்கப்படவேண்டும்
It appears DMK government is going to Supreme Court in appeal. It is unfortunate that the government is treating this as a prestige issue. I think the government should implement HC order and finish the matter here. The DMK will win the hearts of Millions of Hindus without losing the votes of muslims
Hope they heed your advice. It will be win win situation for both parties.
அவசர சந்தோஷம் ஆகாது! அடுத்து உலக நீதிமன்றத்திற்கு போய் வேண்டிய தீர்ப்பு மக்கள் வரிப்பணம் கொடுத்து வாங்க முடியும்!
ஒருநாள் நிகழ்ச்சி.அமைதியா அழகா தீர்வுகாண வாய்ப்புக்கள் இருந்தாலும் அதையெல்லாம் செய்யாமல் இரு சமூகத்தினரிடம் பதற்றம் கசப்பை ஏற்படுத்தவே முயற்சித்து கடைசியில் நீதிமன்றமும் தீர்ப்பு கொடுத்துவிட்டது....அமைதி திரும்பட்டும்.மேலும்
-
போர் நிறுத்த ஒப்பந்தத்தின் 2ம் கட்ட நடவடிக்கை; காசா அமைதி வாரியம் அமைத்தார் அதிபர் டிரம்ப்
-
உதயநிதி வருகை தாமதம்; ஒன்றரை மணிநேரம் தாமதமாக துவங்கியது பாலமேடு ஜல்லிக்கட்டு
-
மாட்டுப்பொங்கலுக்கு பயன்படுத்தும் அலங்கார பொருட்கள் விற்பனை 'ஜோர்'
-
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சமத்துவ பொங்கல்
-
போச்சம்பள்ளியில் வாகன நெரிசல்
-
'மஞ்சப்பை'யுடன் பானை வடிவில் நின்று மாணவியர் பொங்கல் கொண்டாட்டம்