தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 அதிகரிப்பு
சென்னை: சென்னையில் இன்று (ஜனவரி 06) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 560 ரூபாய் அதிகரித்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 640 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.
சர்வதேச நிலவரங்களால், நம் நாட்டில் தங்கம், வெள்ளி விலை உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் கடந்த சனிக்கிழமை (ஜனவரி 03) , ஆபரண தங்கம் கிராம், 12,600 ரூபாய்க்கும், சவரன், 1,00,800 ரூபாய்க்கும் விற்பனையாகின. வெள்ளி கிராம், 257 ரூபாய்க்கு விற்கப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை தங்க சந்தைக்கு விடுமுறை.
அன்று, முந்தைய நாள் விலையிலேயே ஆபரணங்கள் விற்பனையாகின. நேற்று (ஜனவரி 05) காலை, தங்கம் விலை கிராமுக்கு, 80 ரூபாய் உயர்ந்து, 12,680 ரூபாய்க்கு விற்கப்பட்டது. சவரனுக்கு, 640 ரூபாய் அதிகரித்து, 1,01,440 ரூபாய்க்கு விற்பனையானது.
மாலை மீண்டும் தங்கம் விலை கிராமுக்கு, 80 ரூபாய் உயர்ந்து, 12,760 ரூபாய்க்கு விற்கப்பட்டது. சவரனுக்கு, 640 ரூபாய் அதிகரித்து, 1,02,080 ரூபாய்க்கு விற்பனையானது. வெள்ளி கிராமுக்கு, ஒரு ரூபாய் உயர்ந்து, 266 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
இன்றைய நிலவரம்
இந்நிலையில் இன்று (ஜனவரி 06) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 560 ரூபாய் அதிகரித்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 640 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு 70 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 12 ஆயிரத்து 830 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளிக்கு மவுசு
வெள்ளி விலை கிராமுக்கு 5 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் 271 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. கிலோவுக்கு 5 ஆயிரம் ரூபாய் உயர்ந்து ஒரு கிலோ 2 லட்சத்து 71 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கடந்த கால தங்கம் விலை நிலவரங்களை அறிய இங்கே கிளிக் செய்யவும்.
ஒரே நாளில் இரண்டு முறை தங்கம் விலை உயர்ந்தால் எப்படி குறையும்
போற போக்கில் தங்கமே வாங்க முடியாத சூழல் தான் உருவாகும் போலமேலும்
-
'ஜாதி, மத பேதமின்றி மக்கள் சேவை செய்தவர் குருநானக்'
-
67 லட்சம் பேர் வேலைக்காக பதிவு : காலியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்
-
பழநியில் 5 மணி நேரம் காத்திருந்து தரிசனம்
-
பள்ளி சாரா, வயது வந்தோர் கல்வி திட்டம்: சிறந்த சி.இ.ஓ.,க்களுக்கு விருது
-
வங்கியில் போலி நகை அடகு வைத்து ரூ.17 லட்சம் மோசடி: மதிப்பீட்டாளர் உட்பட மூவர் கைது
-
காஷ்மீர் எல்லையில் மீண்டும் தென்பட்டது பாக் ட்ரோன்கள்; சுட்டு வீழ்த்தியது இந்திய ராணுவம்