ஈரான் விவகாரம் குறித்து இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிடம் புடின் ஆலோசனை

மாஸ்கோ: மத்திய கிழக்கிலும், ஈரானிலும் நிலவி வரும் அரசியல் சூழல் குறித்து இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடன், ரஷ்ய அதிபர் புடின் முக்கிய ஆலோசனை நடத்தினார்.

ஈரானில் பணவீக்கம் அதிகரித்ததன் எதிரொலியாக கடந்தாண்டு டிசம்பரில் இருந்து மக்கள் தொடர் போராட்டங்களில் இறங்கி உள்ளனர். போராட்டம் நாளுக்கு நாள் வலுத்துக் கொண்டே வரும் சூழலில், கிட்டத்தட்ட 3000க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஈரான் மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அமெரிக்கா செய்யும் என்று அதிபர் டிரம்ப் அறிவித்து உள்ளார்.

இந் நிலையில் ரஷ்ய அதிபர் புடின், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடன் தொலைபேசி வழியே முக்கிய ஆலோசனை நடத்தி உள்ளார். மத்திய கிழக்கு மற்றும் ஈரான் நாட்டில் நிலவும் நெருக்கடியான சூழல் குறித்து அவர் பேசி உள்ளார்.

இதுகுறித்த கிரெம்ளின் மாளிகை வெளியிட்டு உள்ள அறிக்கை;

ஈரான் விவகாரம் தொடர்பாக நெதன்யாகு உடன் ரஷ்ய அதிபர் புடின் ஆலோசனை நடத்தினார். பிராந்தியத்தில் காணப்படும் ஸ்திரமற்ற நிலைமை, அதற்கான தீர்வு பற்றி இருவரும் விவாதித்தனர். அரசியல் மற்றும் ராஜதந்திர நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது குறித்து நெதன்யாகுவுடன், புடின் கலந்துரையாடினார்.

இவ்வாறு கிரெம்ளின் அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளது.

Advertisement