மதுரையில் ஐஏஎஸ், ஐபிஎஸ் தம்பதி சமத்துவ பொங்கல் கொண்டாட்டம்
மதுரை மண்டேலா நகர் பகுதியில் உள்ள வல்லமை அறக்கட்டளை இலவச காவல் பயிற்சி மையத்தில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது. இதில் விமான போக்குவரத்து துறையில் டி.ஐ.ஜியாக பணியாற்றி வரும் ரம்யா பாரதி மற்றும் அவரது கணவரும், மேற்குவங்க மாநில குறு சிறு மற்றும் நடுதர தொழில் துறை இயக்குனருமான ஸ்வரூப் உதயகுமார் ஐ.ஏ.எஸ் ஆகியோர் காவல் துறையில் சேர்வதற்காக பயிற்சி பெற்று வரும் ஏழை மாணவ மாணவிகளுடன் பொங்கல் வைத்து கொண்டாடி மகிழ்ந்தனர்.
நிகழ்ச்சியில் ஆர்வமாக ஐஏஎஸ் அதிகாரி மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளான இருவரும் பொங்கல் வைத்து மாணவர்களுடன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். 12 குழுக்களாக பிரிந்து பொங்கல் வைத்ததில் முதலில் பொங்கல் வைத்த குழுவுக்கு பரிசுகளும் பாராட்டுக்களும் கொடுக்கப்பட்டது.
பின்னர் பேசிய ஸ்வரூப் உதயகுமார், காவல் பயிற்சி பெற்று வரும் மாணவ மாணவிகளுடன் இணைந்து பொங்கல் வைத்து மகிழ்ந்ததில் மிக்க மகிழ்ச்சி அடைந்ததாக தெரிவித்தார்.
ஸ்வரூப் உதயகுமார் ஐ.ஏ.எஸ் அதிகாரி மதுரையை பூர்வீகமாக கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும்
-
மரம் வளர்பிற்கு பாராட்டு விழா
-
மது பதுக்கிய மூவர் கைது
-
பயன்பாடின்றி வீணாகும் சுகாதார வளாக கட்டடம்
-
விடுமுறையில் ஊட்டியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
-
தண்ணீருக்கு பதில் மலர் தோட்டமாக மாறிய புளியங்குளம் கண்மாய்
-
புதிய கலெக்டர் அலுவலகம் எதிரில் மேம்பாலம்... அமைக்கப்படுமா? நான்கு வழி சாலையை கடப்பதில் அபாயம்