இந்தியா வந்தார் ஜப்பான் வெளியுறவுத்துறை அமைச்சர்; கிரிக்கெட் பேட் பரிசளித்த ஜெய்சங்கர்
புதுடில்லி: இந்தியா வந்துள்ள ஜப்பான் வெளியுறவுத்துறை அமைச்சர் டோஷிமிட்சு மாடேகிக்கு ஜெய்சங்கர் கிரிக்கெட் பேட் பரிசாக வழங்கினார்.
3 நாட்கள் அரசு முறை பயணமாக, ஜப்பான் வெளியுறவு அமைச்சர் டோஷிமிட்சு மாடேகி இந்தியாவுக்கு வருகை தந்தார். டில்லி விமான நிலையத்தில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் அவர் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உடன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இரு நாட்டுத் தலைவர்களும் இந்தியா, ஜப்பான் ஆகிய இரு நாடுகளுக்கு இடையே உறவை வலுப்படுத்துவது குறித்து பேச்சு நடத்தினர்.
கிரிக்கெட் மீதான தங்கள் பகிரப்பட்ட ஆர்வத்தை வெளிப்படுத்திய தலைவர்கள், கையொப்பமிடப்பட்ட பேட் மற்றும் அணி ஜெர்சியை பரிமாறிக் கொண்டனர். இது குறித்து புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்து ஜெய்சங்கர் கூறியிருப்பதாவது:
ஜப்பான் வெளியுறவு அமைச்சர் டோஷிமிட்சு மாடேகியை இந்தியாவிற்கு வரவேற்பதில் மகிழ்ச்சி. இன்று பேச்சுவார்த்தைகளை நடத்தும் வேளையில், விளையாட்டு மீதான
எங்களது ஆர்வத்தை பகிர்ந்து கொண்டது மகிழ்ச்சி அளிக்கிறது.
அவரிடமிருந்து ஜப்பான் தேசிய கிரிக்கெட் அணியின் ஜெர்சியைப் பெற்றதில் பெருமை அடைகிறேன். இந்திய கிரிக்கெட் அணியால் கையொப்பமிடப்பட்ட ஒரு பேட் அவருக்கு பரிசாக அளித்தேன். இவ்வாறு ஜெயசங்கர் கூறியுள்ளார்.
கிரிக்கெட்டால் பல நாடுகளின் எல்லை கடந்து உறவு வலுப்படுகிறது
கிரிக்கெட் மீதான அன்பையும் பாசத்தையும் பிரதிபலிக்கிறதுமேலும்
-
குடியரசு தின அணிவகுப்பு: உளவுத்துறை எச்சரிக்கையை தொடர்ந்து நாடு முழுவதும் உஷார்!
-
யாருடன் கூட்டணி; டில்லியில் காங்., நிர்வாகிகளுடன் ராகுல் ஆலோசனை
-
அன்னுார் வட்டாரத்தில் பொங்கல் கோலாகல கொண்டாட்டம்
-
உங்களுக்கு செட் ஆகல சார்.. வெயிட் பண்ணுங்க: இலவசங்கள் அறிவித்த இபிஎஸ்சுக்கு டிஆர்பி ராஜா பதில்
-
ஈரானில் தொடரும் வன்முறை; விமானத்தில் டில்லி திரும்பிய இந்தியர்கள்!
-
பொலிவுறு நகரம் இந்தூரில் சுத்தமான குடிநீர் இல்லை; ராகுல் விமர்சனம்