கடலுார்: புகார் பெட்டி
வாகன ஓட்டிகள் அச்சம்
திட்டக்குடி அடுத்த கூடலுாரில், திட்டக்குடி- விருத்தாசலம் நெடுஞ்சாலையில் சுற்றித்திரியும் குதிரைகளால் வாகன ஓட்டிகள் அச்சமடைகின்றனர்.
ராதாகிருஷ்ணன், கூடலுார்.
போக்குவரத்து நெரிசல்
விருத்தாசலம் தெற்கு கோபுர வீதியில் வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தப்படுவதால், வேப்பூர் மார்க்கமாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதியடைகின்றனர்.
குமார், விருத்தாசலம்.
நிழற்குடை அமைக்கப்படுமா?
பெண்ணாடம் அடுத்த நந்தப்பாடி பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராஜா, முருகன்குடி.
சாலையோர மணல் குவியல்
கடலுார் பாரதி சாலையில் குவிந்துள்ள மணல் வாகன ஓட்டிகளுக்கு அச்சுறுத்தலாக உள்ளதால், அதை அகற்ற வேண்டும்.
ராகேஷ், கடலுார் கட்டுப்பாடின்றி வாகனங்கள் நிறுத்தம் திட்டக்குடி பெருமுளை சாலையில் கட்டுப்பாடின்றி வாகனங்கள் நிறுத்தப்படுவதால், பஸ் மற்றும் கார்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
பிரகாஷ், திட்டக்குடி.
சுகாதார சீர்கேடு
ஆவினங்குடி பஸ்நிறுத்தம் பின்பகுதியில் உள்ள வெலிங்டன் வாய்க்காலில் கொட்டப்படும் இறைச்சி கழிவுகளால் சுகாதார சீர்கேடு உருவாகி நோய்த்தொற்று ஏற்படும் அவலநிலை உள்ளது.
தருண், ஆவினங்குடி.
நிழற்குடை சீரமைக்கப்படுமா?
விருத்தாசலம் பெரியார் நகர் பஸ் நிறுத்தத்தில் பாழான குளிர்சாதன நிழற்குடையை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
நாராயணசாமி, பெரியார் நகர். பஸ் வசதி தேவை திட்டக்குடி தாலுகா, தச்சூர் கிராமத்தில் உயர்நிலைப்பள்ளி வளாகம், குடியிருப்பு பகுதியிலிருந்து தொலைவில் உள்ளதால், மாணவர்களுக்கு பஸ் வசதி ஏற்படுத்தித்தர வேண்டும்.
முருகன், தச்சூர்