மம்தா வீட்டுக்கு போவது உறுதி... ரூ.100 கோடி மோசடி குறித்து பாஜ விமர்சனம்
கோல்கட்டா: மேற்கு வங்கத்தில் வெள்ள நிவாரண நிதி ரூ.100 கோடி மோசடி நடந்துள்ளதாக சிஏஜி அறிக்கை சமர்ப்பித்த நிலையில், முதல்வர் மம்தா பானர்ஜி நிரந்தரமாக வீட்டுக்குப் போவது உறுதி என்று பாஜ தெரிவித்துள்ளது.
மேற்கு வங்கத்தின் மால்டா மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான வெள்ள நிவாரண நிதியில், ரூ.100 கோடி மோசடி நடந்துள்ளதாக 700 பக்க அறிக்கையை கோல்கட்டா நீதிமன்றத்தில் சிஏஜி அறிக்கை சமர்ப்பித்துள்ளது.
சிஏஜியின் இந்த அறிக்கையைச் சுட்டிக்காட்டிய பாஜ, 2026ம் ஆண்டு மம்தா பானர்ஜி நிரந்தரமாக வீட்டுக்கு கிளம்பும் காலம் என்று கூறியுள்ளது.
இது பாஜ குறித்து வெளியிட்ட எக்ஸ் தளப்பதிவில்; சிஏஜி அறிக்கையில் 6,965 நபர்கள் ஒரே வங்கிக் கணக்கில் பல பரிவர்த்தனைகள் மூலம் வெள்ள நிவாரணத் தொகையை பெற்றுள்ளனர். ஹரிச்சந்திரபூர் 2 தொகுதியில் ஒரே நபர் 42 முறை நிவாரணத் தொகையை பெற்றுள்ளார். மேலும், மாஜிஸ்திரேட்டின் அறிக்கையில் வீடுகளுக்கு எந்த சேதமும் இல்லை என்று குறிப்பிட்ட நிலையிலும், வீடுகளுக்கான சேதத்திற்காக ரூ.7.5 கோடி விநியோகிக்கப்பட்டுள்ளது.
மக்கள் பிரதிநிதிகள், அரசு ஊழியர்கள் மற்றும் திரிணமுல் காங்கிரஸ் தொடர்புடைய நபர்கள் ஊதியம் பெற்றுக் கொண்டிருந்த போதும், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கான சலுகைகளைப் பெற்று வந்துள்ளனர். நிவாரணத்திற்கு விண்ணப்பிக்காதவர்களுக்கு ரூ.7 கோடிக்கும் அதிகமாக பணம் செலுத்தப்பட்டுள்ளது.
இது அரசின் ஆதரவுடன் நடந்த கொள்ளையாகும். வஞ்சிக்கப்பட்டதாக மம்தா பானர்ஜி கூறி வரும் நிலையில், ஏழைகளிடம் இருந்தே அவரது கட்சியினர் கொள்ளையடித்துள்ளனர். திருட்டு மற்றும் சிட் பண்ட் கலாசாரத்தின் அடிப்படையில் தான் திரிணமுல் காங்கிரஸ் கட்டமைக்கப்பட்டுள்ளது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் கண்ணீர் மூலம் செழிக்கும் ஆட்சியைத் தான் மம்தா நடத்தி கொண்டிருக்கிறார். இந்த மோசடி அரசின் நாட்கள் எண்ணப்படுகின்றன. 2026ம் ஆண்டோடு, மம்தா பானர்ஜி நிரந்தரமாக வீட்டுக்குப் போவது உறுதி, எனக் குறிப்பிட்டுள்ளது.
மேலும்
-
பாஜ ஆளும் மாநிலங்களில் வங்கமொழி பேசும் புலம்பெயர் தொழிலாளர்கள் சித்ரவதை: மம்தா குற்றச்சாட்டு
-
பாலமேடு ஜல்லிக்கட்டு நிறைவு: முதலிடம் பிடித்த அஜித்துக்கு கார் பரிசு
-
ஜன.20ல் பாஜ புதிய தேசிய தலைவர் அறிவிப்பு; அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு
-
ஈரானில் தவிக்கும் இந்தியர்களுக்கு உதவுவதில் உறுதி; மத்திய அரசு திட்டவட்டம்
-
பொருளாதார பாதுகாப்பு மிகவும் முக்கியமானது: ஜெய்சங்கர் வலியுறுத்தல்
-
வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் சேவையை நாளை துவக்கி வைக்கிறார் பிரதமர்