வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் சேவையை இன்று துவக்கி வைக்கிறார் பிரதமர்

4


புதுடில்லி: இன்று (ஜனவரி 17) மேற்கு வங்கம் செல்லும் பிரதமர் மோடி, நாட்டின் முதலாவது வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் சேவையை துவக்கி வைக்க உள்ளார். நாளை அசாம் மாநிலத்துக்கும் செல்ல உள்ளார்.


வந்தே பாரத் ரயில் சேவைக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, அடுத்ததாக படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்களை இயக்க ரயில்வே தீவிரம் காட்டி வருகிறது. இதற்கான பணிகள் அனைத்தும் முடிவடைந்து விட்டன.


இந்நிலையில், இன்று மேற்கு வங்கத்தின் மால்டா பகுதிக்கு பிரதமர் மோடி செல்கிறார். அங்கு, ஹவுரா முதல் அசாமின் கவுகாத்தி வரையிலான நாட்டின் முதலாவது வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் சேவையை துவக்கி வைக்கிறார். இதன் பிறகு 3,250 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு ரயில், சாலை உள்கட்டமைப்பு திட்டங்கள் மற்றும் பல்வேறு நலத்திட்டங்களையும் துவக்கி வைக்கிறார்.


நாளை 18 ம் தேதி ஹூக்ளி மாவட்டத்தில் 830 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை துவக்கிவைப்பதுடன், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட உள்ளார். மேலும், நியூ ஜல்பைகுரி - நாகர்கோயில் அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ், நியூ ஜல்பைகுரி - திருச்சி அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில் சேவைகளையும் பிரதமர் மோடி துவக்கி வைக்க உள்ளார். அன்றைய தினம் அசாமில் நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில்பங்கேற்கும் பிரதமர் மோடி பல்வேறு நலத்திட்டங்களை துவக்கிவைக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement