ஜல்லிக்கட்டு காளையை களம் காண வழி அனுப்பிய அண்ணாமலை!

10


சென்னை: நடப்பாண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி இன்று தொடங்கிய நிலையில், தான் வளர்க்கும் ஜல்லிக்கட்டு காளையை போட்டிகளில் பங்கேற்பதற்காக, தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை வழி அனுப்பி வைத்துள்ளார்.


புதுக்கோட்டை மாவட்டம், தச்சங்குறிச்சியில் இன்று (டிசம்பர் 3 ஆம் தேதி) 2026ம் ஆண்டிற்கான தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி கோலாகலமாக தொடங்கியது. தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான இந்த போட்டியில் 900 காளைகளும், 300 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். ஜல்லிக்கட்டு போட்டியைக் காண பொதுமக்கள் பலரும் கூடினர்.


இந்நிலையில் இன்று தான் வளர்க்கும் ஜல்லிக்கட்டு காளையை போட்டிக்கு அண்ணாமலை வழி அனுப்பி வைத்தார். அவர் தனது காளைகளின் படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:


சீசன் வந்தவுடன், இரண்டு மாத பயணத்தை எனது ஜல்லிக்கட்டு காளை தொடங்கியது. தமிழகம் முழுவதும் பல்வேறு ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கிறது. அன்புக்குரிய காளையை பெருமிதமும், லேசான சோகமும் நிறைந்த இதயங்களுடன் அனுப்பி வைத்தேன். புகழ்பெற்ற காளையின் வருகைக்காக ஆவலுடன் காத்திருப்போம். இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.

Advertisement