மியான்மர் முதல்கட்ட தேர்தலில் ராணுவ ஆதரவாளர்கள் வெற்றி
பாங்காக்: மியான்மரில் சமீபத்தில் நடந்த முதற்கட்ட பொதுத் தேர்தலில், ராணுவத்தின் ஆதரவு பெற்ற கட்சிகள் முன்னிலை வகிப்பதாக அந்நாட்டு தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.
தற்போது ராணுவ ஆட்சி நடக்கும், நம் அண்டை நாடான மியான்மரில், பார்லிமென்ட் தேர்தல் மூன்று கட்டங்களாக நடக்கிறது. முதற்கட்ட தேர்தல் கடந்த டிசம்பர் 28ம் தேதி நடத்தப்பட்டது. இதில் முக்கிய எதிர்க்கட்சிகள் எதுவும் பங்கேற்காத நிலையில், ராணுவ அரசுக்கு ஆதரவு தெரிவிக்கும் சிறிய கட்சிகள் தேர்தலில் போட்டியிட்டன. இந்நிலையில், முதற்கட்ட தேர்தல் முடிவுகளை அந்நாட்டு தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ளது.
தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ள முடிவுகளின்படி, யு.எஸ்.டி.பி., எனப்படும் ராணுவத்தின் நேரடி ஆதரவு பெற்ற மத்திய ஒற்றுமை மற்றும் வளர்ச்சிக் கட்சி பெரும்பாலான இடங்களை கைப்பற்றியுள்ளது.
முடிவுகள் அறிவிக்கப்பட்ட 40 இடங்களில் 38 இடங்களை யு.எஸ்.டி.பி., வென்றுள்ளது. அக்கட்சியின் தலைவரும், ராணுவ தளபதி மின் ஆங் லைங்கிற்கு நெருக்கமானவருமான கின் யி, அந்நாட்டு தலைநகர் நேபிடாவில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
முதற்கட்டத் தேர்தல் 102 நகரங்களில் நடந்தது. இதில் 52 சதவீத மக்கள், அதாவது 60 லட்சம் மக்கள் வாக்களித்துள்ளனர். இந்நிலையில் இரண்டாம் கட்ட தேர்தல் வரும், 11ம் தேதியும், மூன்றாம் கட்டத் தேர்தல் 25ம் தேதியும் நடைபெற உள்ளன.
இந்தத் தேர்தலை எதிர்க்கட்சிகளும், சர்வதேச அமைப்புகளும் கண் துடைப்பு நாடகம் என கடுமையாக விமர்சித்துள்ளன.
அந்நாட்டின் முக்கிய கட்சியான ஆங் சான் சூச்சியின் தேசிய ஜனநாயக லீக் உட்பட 40 முக்கிய கட்சிகள் கலைக்கப்பட்டதுடன், இத்தேர்தலில் போட்டியிடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஒரு பயல் இவர்களை ஆதரிக்க மாட்டார். போலியான தேர்தல்மேலும்
-
திருப்பரங்குன்றம் மலையில் கோவில் தலவிருட்சம் கல்லத்தி மரத்திலிருந்த சந்தனக்கூடு கொடி அகற்றம் தர்கா தரப்பினர் போலீசில் புகார்
-
தி.மு.க., கூட்டணியில் காங்., இருக்காது: பொங்கல் விழாவில் பழனிசாமி உறுதி
-
வேளாண் பல்கலையில் களைகட்டிய பட்டி பொங்கல்
-
இம்மாதத்தில் ஒரு நாள் கூட்டணி அறிவிப்பு: பன்னீர்
-
சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து அவசரமாக திரும்ப அழைக்கப்பட்ட வீரர்கள்
-
ஆரோக்கியமான இந்தியாவால் தான் வல்லரசு உருவாகும்! துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன்