காம்பியா நாட்டில் படகு கவிழ்ந்து விபத்து 7 பேர் பலி; 91 பேர் மாயம்

பன்ஜுல்: காம்பியா நாட்டில் புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஏழு பேர் பலியாகினர்; 91க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளனர்.


ஆப்ரிக்க நாடான காம்பியாவைச் சேர்ந்த இளைஞர்கள் வேலை தேடி ஐரோப்பிய நாடுகளுக்கு செல்வது வழக்கம். அவர்கள் அட்லாண்டிக் கடல் வழியாக படகுகளில் ஆபத்தான முறையில் சட்டவிரோதமாக பயணம் மேற்கொள்கின்றனர். அப்படி பயணிக்கும் படகுகள் விபத்தில் சிக்குவது தொடர்கதையாக உள்ளது.

இந்நிலையில், 200க்கும் மேற்பட்டோர் சென்ற படகு ஒன்று, வடமேற்கு காம்பியாவின் நார்த் பேங்க் பகுதியில் உள்ள ஜினாக் அருகே கவிழ்ந்தது. இதில், 102 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்; 7 பேர் உயிரிழந்தனர். காணாமல் போன மற்றவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கடந்த ஆண்டு ஆகஸ்டில் காம்பியாவில் இருந்து புறப்பட்ட படகு மொரிட்டானியா அருகே கவிழ்ந்ததில், 150 பேர் உயிரிழந்தனர்.

Advertisement