இளம் இந்தியா வெற்றி
பெனோனி: தென் ஆப்ரிக்க சென்ற இளம் இந்திய அணி, மூன்று போட்டி கொண்ட யூத் ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி நேற்று பெனோனியில் நடந்தது 'டாஸ்' வென்ற தென் ஆப்ரிக்கா, பீல்டிங் தேர்வு செய்தது.
இந்திய அணிக்கு கேப்டன் வைபவ் சூர்யவன்ஷி (11), ஆரோன் ஜார்ஜ் (5) ஜோடி துவக்கம் தந்தது. வேதாந்த், அபிக்ஞான் தலா 21 ரன் எடுத்தனர். ஹர்வன்ஷ் பங்காளியா, அம்ப்ரிஷ் இணைந்து அரைசதம் அடித்து, அணியை மீட்டனர். 5வது விக்கெட்டுக்கு 137 ரன் சேர்த்த போது, அம்ப்ரிஷ் (65) அவுட்டானார். ஹர்வன்ஷ் 93 ரன்னில் திரும்பினார்.
பின் வரிசையில் கனிஷ்க் (32), கிலன் படேல் (26) சற்று உதவினர். இந்திய அணி 50 ஓவரில் 301 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.
அடுத்து களமிறங்கிய தென் ஆப்ரிக்க அணி 27.4 ஓவரில் 148/4 ரன் எடுத்திருந்த போது, மோசமான வானிலை காரணமாக போட்டி நிறுத்தப்பட்டது. 'டக்வொர்த் லீவிஸ்' விதிப்படி இந்திய அணி 25 ரன்னில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
மேலும்
-
திருப்பரங்குன்றம் மலையில் கோவில் தலவிருட்சம் கல்லத்தி மரத்திலிருந்த சந்தனக்கூடு கொடி அகற்றம் தர்கா தரப்பினர் போலீசில் புகார்
-
தி.மு.க., கூட்டணியில் காங்., இருக்காது: பொங்கல் விழாவில் பழனிசாமி உறுதி
-
வேளாண் பல்கலையில் களைகட்டிய பட்டி பொங்கல்
-
இம்மாதத்தில் ஒரு நாள் கூட்டணி அறிவிப்பு: பன்னீர்
-
சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து அவசரமாக திரும்ப அழைக்கப்பட்ட வீரர்கள்
-
ஆரோக்கியமான இந்தியாவால் தான் வல்லரசு உருவாகும்! துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன்