இந்தூர் இறப்புகள்: கடும் கோபத்தில் மோடி!
இந்தூர்: சமீபத்தில், மத்திய பிரதேசம், இந்துாரில் கழிவுநீர் கலந்த குடிநீரை பருகி, 10 பேர் உயிரிழந்தனர். தற்போது இங்கு பா.ஜ., ஆட்சி நடைபெறுகிறது. 'இந்தியாவின் மிகவும் சுத்தமான நகரம் என விருது அளிக்கப்பட்ட இந்துாரில், இப்படி அசுத்தமான குடி நீர் எப்படி வழங்கப்படுகிறது?' என கேள்விகள் எழுந்துள்ளன.
ஒரு ஆசிரியை, 10 ஆண்டுகளுக்கு பின் பிறந்த குழந்தைக்கு, இந்த குடிநீரைக் கலந்து பால் கொடுத்துள்ளார்; அந்த குழந்தை இறந்துவிட்டது. அந்த குடும்பம், இப்போது சோகத்தில் மூழ்கியுள்ளது. இதைப் போல பல குடும்பங்கள் குழந்தைகளை இழந்துள்ளன.
'குடிநீர் செல்லும் குழாயில் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளதுடன், கழிவுகளை சேமிக்க, 'டேங்க்' எதுவும் கட்டப்படவில்லையாம். இ தனால் கழிவுநீர் குடிநீரோடு கலந்து, குழந்தைகள் இறக்க காரணமாகிவிட்டது' என, அரசு அறிக்கை தெரிவித்துள்ளது.
மத்திய பிரதேச அமைச்சர் கைலாஷ் வர்கியாவின் பேச்சு இந்த விவகாரத்தில் பா.ஜ.,விற்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து நிருபர் ஒருவர் கேட்ட கேள்விக்கு, 'இது தேவையில்லாத கேள்வி' என கூறியதோடு, ஒரு கேவலமான வார்த்தையையும் பயன்படுத்தினார் அமைச்சர். இது பெரும் விவாதத்தை ஏற்படுத்த, தன் செயலுக்கு எக்ஸ் தளத்தில் வருத்தம் தெரிவித்தார்.
இதற்கிடையே, இந்துார் இறப்புகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் லோக்சபா காங்கிரஸ் தலைவர் ராகுல்; மற்ற எதிர்க்கட்சிகளும் பா.ஜ.,வை கடுமையாக விமர்சித்துள்ளன.
இந்த விவகாரம் மோடியை கடும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளதாம். அமைச்சர் கைலாஷை கண்டித்ததுடன், மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவிடம் பேசி, 'இந்துார் பெயரைக் கெடுத்து விட்டீர்களே... கவனமாக இருந்திருக்க வேண்டாமா? இதற்கு காரணமானவர்களை கடுமையாக தண்டியுங்கள்' எனவும் சொல்லி இருக்கிறாராம்.
ஸ்வச் பாரத் திட்டத்தில் அடித்த கோடானு கோடி கொள்ளை. இப்போ மபியிலே கொள்ளை நோய், வாந்தி, பேதி, குஜராத்தில் டைஃபாய்ட் என்று வினையாக மாறி இருக்கிறது. விடாது கருப்பு.
இதை வைத்து அரசியல் வேணுமானால் செய்வார்
உண்மையைச் சொல்லப் போனால் இந்த தூய்மை இந்தியா அறிவிப்பு பயிற்சிக்குப் பிறகு நாடு எங்கும் ஒரு சுத்தமாக பார்க்க முடிகிறது முன்பு போல அசுத்தங்கள் அந்த அளவிற்கு இல்லை என்றாலும் இன்னும் கவனமாக இருந்து நாம் பழக வேண்டி இருக்கிறது
அரசியல்ரீதியாகப் பார்த்தால், இப்படியொரு துயர சம்பவம், தமிழ்நாட்டிலோ, மேற்கு வங்கத்திலோ அல்லது பாரதிய ஜனதா / அல்லது கூட்டணி ஆளாத வேறு எந்தவொரு மாநிலத்திலேனும் நடந்திருந்தால் இப்படித்தான் இருக்குமா, எதிர்வினைகள்?
இதுவொன்றும் இந்தூர் மாநகரத்தின் நிலைமை மட்டுமல்ல யார் ஆட்சி செய்துகொண்டிருந்தாலும், இன்னும் எந்தெந்த மாநிலங்களிலுள்ள மாநகரங்களில், நகரங்களில் என்ன மாதிரியான நிலைமையோ? கிராம, குக்கிராமங்களைப் பற்றியோ கேட்கவே வேண்டாம். மரணங்கள் நேரும்போது மட்டுமே இவை அம்பலப்படுகின்றன.
பாஜக ஆளாத மாநிலங்களில் இதைவிட அவலங்கள் அரங்கேறியுள்ளன..... உதாரணம் அந்த இருமல் மருந்து சோகம் .... தமிழக அரசுதான் அந்த நிறுவனத்துக்கு உரிமம் வழங்கியுள்ளது .... ஆகவே நீங்கள் சொல்வதில் நியாயம் இருக்கிறது .... பாஜக அரசிடம்தான் பெர்ஃபெக்சன் எதிர்பார்க்கிறார்கள் என்று எடுத்துக்கொள்ளுங்கள் ....
கரூரில் நெரிசல் பலியை விசாரிப்பதற்காக மத்தியிலிருந்து நிறைய குழுக்கள் வந்தனவே. இந்தூருக்கும் யாராவது சென்று உள்ளபடியே இறந்தவர்களின் எண்ணிக்கையையும் யார் குற்றவாளி என்பதையும் கண்டறிந்து மக்களுக்குத் தெரிவிக்கலாமே. தவிர, சில நேரங்களில் சின்னச் சின்ன விஷயங்களில்கூட அக்கறை காட்டும் உச்ச நீதிமன்றம், இதைப் பற்றியும் தானே முன்வந்து விசாரிக்கலாமே? கொடுத்து வைத்தவை தெருநாய்களும் ஜல்லிக்கட்டுக் காளைகளும் மனிதர்களுக்குக் கிடைக்காத மகிமையையும் கருணையையும் இவற்றால் பெற முடிகிறதே.
ஏற்கனவே பீமாரு மாநிலங்களில் ஒன்று.. மத அடிப்படையில் ஹிந்துக்களைத் திரட்டி ஓட்டு வாங்கும் முயற்சியிலும் மண் ..... பாஜக விழிக்க வேண்டிய நேரம் இது .....
மதியபிரதேசத்தில் பிஜேபி ஆட்சியில் எத்தனையோ ஊழல்கள், எத்தனையோ மோசமான விளைவுகள், இவ்வளவுக்கு பிறகும் அங்கு பிஜேபி ஆட்சி மக்களால் தேந்தெடுக்க பட்டிருக்க வாய்ப்பே இல்லை.
பெயரில்லாமல் திரிபவர்களுக்கு ஒரே குஷிதான்.
மகிழ்வார்கள் .....
பழைய நகர் அமைப்பு திட்டமிடல் கடினம். ஆக்கிரமிப்பு இருக்கும். குடிநீர், கழிவு நீர் செல்ல போதிய இடம் சாலை மற்றும் வீட்டை சுற்றி இருக்காது. நாடு முழுவதும் குடிநீரை தெருவுக்கு ஒரு இடத்தில் சுத்திகரித்து, 10, 20 லிட்டர் கேன் மூலம் விலைக்கு வழங்குவது எளிது. தண்ணீர் விரயம் குறையும். பாதாள சாக்கடை மூலம் கழிவு நீர் வெளியேற்றலாம். வீட்டு குப்பை தினமும் சேகரித்து கிடங்கில் போட வேண்டும். நிறுவனம் தன் செலவில் அகற்றி, கிடங்கில் போட வேண்டும்..
இது ஒன்றும் புதிதல்ல .. தமிழகத்தில் பல்லாவரத்தில் ஒருவர் கழிவுநீர் கலந்த குடிநீரை பருகி இறந்ததை மாரடைப்ப்பால் இறந்ததாக மறைத்தது மேலும் பலரின் நிலை குறித்து அறிக்கை தராமல் இருந்தது மக்கள் மறக்கவில்லைமேலும்
-
திருப்பரங்குன்றம் மலையில் கோவில் தலவிருட்சம் கல்லத்தி மரத்திலிருந்த சந்தனக்கூடு கொடி அகற்றம் தர்கா தரப்பினர் போலீசில் புகார்
-
தி.மு.க., கூட்டணியில் காங்., இருக்காது: பொங்கல் விழாவில் பழனிசாமி உறுதி
-
வேளாண் பல்கலையில் களைகட்டிய பட்டி பொங்கல்
-
இம்மாதத்தில் ஒரு நாள் கூட்டணி அறிவிப்பு: பன்னீர்
-
சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து அவசரமாக திரும்ப அழைக்கப்பட்ட வீரர்கள்
-
ஆரோக்கியமான இந்தியாவால் தான் வல்லரசு உருவாகும்! துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன்