சுற்றுலா வளர்ச்சி கழக செயலி பழுது: அறைகள் முன்பதிவு செய்வதில் சிக்கல்
சென்னை:தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் நடத்தப்படும் ஓட்டல்களில், அறைகள் முன்பதிவு செய்வதற்காக உருவாக்கப்பட்ட செயலி, முறையாக செயல்படாததால், அறைகள் முன்பதிவு செய்ய முடியாமல், சுற்றுலா பயணியர் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட சுற்றுலா தலங்களில், 'ஓட்டல் தமிழ்நாடு' என்ற பெயரில், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில், தங்கும் விடுதிகள் நடத்தப்படுகின்றன. இவற்றில், அறைகளின் அளவு மற்றும் வசதிக்கேற்ப கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பண்டிகை காலம் சுற்றுலா செல்வோர், ஓட்டலில் அறைகளை முன்பதிவு செய்த பின்னரே, சுற்றுலா தலங்களுக்கு புறப்படுகின்றனர். எனவே, 'ஓட்டல் தமிழ்நாடு' விடுதிகளில் தங்க, 'சுற்றுலா' என்ற மொபைல் செயலி உருவாக்கப்பட்டது.
பயணியர் தங்கள் விபரம், சுற்றுலா செல்லும் இடம், தேதி, தேவைப்படும் அறை உள்ளிட்ட தகவல்களை பதிவிட்டு, 'ஆன்லைன்' வழியே கட்டணம் செலுத்தி, அறைகளை முன்பதிவு செய்து கொள்ளலாம்.
ஆனால், பண்டிகை காலங்கள், விழாக்கள் மற்றும் பள்ளி விடுமுறை நாட்களில், சுற்றுலா செயலியில், புதிய பயனாளர்களால், அறைகளை முன்பதிவு செய்ய முடியவில்லை. ஏற்கனவே பதிவு செய்துள்ளவர்களும், ஓ.டி.பி., பெறுவதில் சிக்கல் ஏற்படுவதாக, குற்றம் சாட்டி உள்ளனர்.
இணையதளம் குறிப்பாக, ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட முக்கிய சுற்றுலா தலங்களில் செயல்படும், 'ஓட்டல் தமிழ்நாடு' விடுதிகளில், அறைகள் காலியாக இருப்பதாக, இணையதளத்தில் காண்பிக்கப்படுகிறது.
நேரில் சென்றால், ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்டுவிட்டது என, ஓட்டல் ஊழியர்கள் கூறுகின்றனர். இதனால், ஓட்டல் தமிழ்நாடு அறைகளை, சாதாரண நபர்கள் பெறுவது சிரமமாக உள்ளது.
இது குறித்து, சுற்றுலாத் துறை அதிகாரிகள் கூறுகையில், 'பயணியர் கூறிய கருத்துக்கள் அடிப்படையில், செயலியை மேம்படுத்த, நடவடிக்கை எடுத்து வருகிறோம்' என்றனர்.
மேலும்
-
இளம் தலைமுறைக்கு வழிகாட்டி கோலி: கவாஸ்கர் பாராட்டு
-
3 தங்கம் வென்றார் துளசிமதி * எகிப்து பாரா பாட்மின்டனில்
-
'பிளே-ஆப்' சுற்றில் பெங்களூரு: தொடர்ந்து 5வது வெற்றி
-
தமிழகம் இரண்டு தங்கம் * தேசிய பள்ளி செஸ் தொடரில்...
-
வங்கதேச அணிக்கு ஐ.சி.சி., கெடு * 'டி-20' உலக கோப்பை தொடரில் பங்கேற்க...
-
வெளியேறியது கேப்டவுன் அணி * 'எஸ்.ஏ.20' தொடரில்