'பிளே-ஆப்' சுற்றில் பெங்களூரு: தொடர்ந்து 5வது வெற்றி
வதோதரா: பெண்கள் பிரிமியர் லீக் தொடரில் வரிசையாக 5வது வெற்றியை பதிவு செய்த பெங்களூரு அணி, 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறியது. லீக் போட்டியில் 61 ரன் வித்தியாசத்தில் குஜராத் அணியை வீழ்த்தியது.
குஜராத்தின் வதோதராவில் நேற்று நடந்த பெண்கள் பிரிமியர் லீக் தொடருக்கான லீக் போட்டியில் குஜராத், பெங்களூரு அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற குஜராத் அணி 'பீல்டிங்' தேர்வு செய்தது.
பெங்களூரு அணிக்கு கிரேஸ் ஹாரிஸ் (1), ஜார்ஜியா (1) ஏமாற்றினர். கேப்டன் ஸ்மிருதி மந்தனா (26), ரிச்சா கோஷ் (27) கைகொடுத்தனர். அபாரமாக ஆடிய கவுதமி (73) அரைசதம் கடந்தார். ராதா யாதவ் (17) ஆறுதல் தந்தார். பெங்களூரு அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 178 ரன் எடுத்தது. நாடின் டி கிளார்க் (4), ஷ்ரேயங்கா (8) அவுட்டாகாமல் இருந்தனர். குஜராத் அணி சார்பில் காஷ்வீ, ஆஷ்லே கார்ட்னர் தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.
சவாலான இலக்கை விரட்டிய குஜராத் அணிக்கு பெத் மூனே (3), சோபி டெவின் (0), கனிகா அஹுஜா (0) ஏமாற்றினர். அனுஷ்கா சர்மா (18) நிலைக்கவில்லை. காஷ்வீ (4), ஜார்ஜியா வேர்ஹாம் (2) சோபிக்கவில்லை. பொறுப்பாக ஆடிய கேப்டன் ஆஷ்லே கார்ட்னர் (54) அரைசதம் கடந்தார். பாரதி புல்மாலி (14) நிலைக்கவில்லை.
குஜராத் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 117 ரன் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. தனுஜா (11), ரேணுகா (6) அவுட்டாகாமல் இருந்தனர். பெங்களூரு அணி சார்பில் சயாலி 3, நாடின் டி கிளார்க் 2 விக்கெட் சாய்த்தனர். இதுவரை விளையாடிய 5 போட்டியிலும் வெற்றி பெற்ற பெங்களூரு அணி, 10 புள்ளிகளுடன் 'பிளே-ஆப்' சுற்றுக்குள் நுழைந்தது.
மேலும்
-
தமிழகத்தில் ஆலை அமைக்கும் உ.பி., நிறுவனம்
-
ரூ.175 கோடி திரட்டியது 'அசெட்பிளஸ்'
-
ஓசூரில் 'சிட்கோ' தொழிற்பேட்டை
-
ரூ.10,300 கோடியில் சென்னையில் உர ஆலை
-
ஜப்பானுக்கு ஆடை ஏற்றுமதி 31 சதவீதம் உயர்வு 7 மாதத்தில் ரூ.1,216 கோடிக்கு வர்த்தகம்
-
முதலீட்டாளர்களின் நம்பிக்கைக்கு உரிய மாநிலமாக உள்ளது தமிழகம் உலக பொருளாதார மன்ற அறிக்கையில் தகவல்