வெளியேறியது கேப்டவுன் அணி * 'எஸ்.ஏ.20' தொடரில்

கெபேஹா: 'எஸ்.ஏ.20' தொடரில் இருந்து நடப்பு சாம்பியன் மும்பை கேப்டவுன் அணி வெளியேறியது.
தென் ஆப்ரிக்காவில் உள்ளூர் 'எஸ்.ஏ.20' தொடர் நான்காவது சீசன் நடக்கிறது. 6 அணிகள் பங்கேற்கின்றன. இதன் லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் அணி, ஈஸ்டர்ன் கேப் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற ஈஸ்டர்ன் கேப் அணி பீல்டிங் தேர்வு செய்தது.
கேப்டவுன் அணிக்கு வான் டெர் துசென் (21), ஜார்ஜ் லிண்டே (30) சற்று உதவினர். ஹென்ரிக்ஸ் அரைசதம் கடந்தார். கேப்டவுன் அணி 20 ஓவரில் 148/6 ரன் எடுத்தது. ஹென்ரிக்ஸ் (70) அவுட்டாகாமல் இருந்தார்.
அடுத்து களமிறங்கிய ஈஸ்டர்ன் கேப் அணிக்கு குயின்டன் டி காக் (56), மாத்யூ பிரீட்ஸ்கே (66) கைகொடுக்க, 19.5 ஓவரில் 149/3 ரன் எடுத்து 7 விக்கெட்டில் வெற்றி பெற்றது.
பங்கேற்ற 10 போட்டியில் 3ல் மட்டும் வென்ற (6 தோல்வி, 1 முடிவில்லை) கேப்டவுன் அணி (14 புள்ளி) பட்டியலில் கடைசி இடம் பெற்று, அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து, வெளியேறியது.

Advertisement