தமிழகம் இரண்டு தங்கம் * தேசிய பள்ளி செஸ் தொடரில்...

ராஞ்சி: தேசிய பள்ளி விளையாட்டு, செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் தமிழக ஆண்கள், பெண்கள் அணிகள் தங்கம் வென்றன.
ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் 69 வது தேசிய பள்ளி விளையாட்டு, செஸ் சாம்பியன்ஷிப் தொடர் நடந்தது. 14 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆண்கள் பிரிவில் தமிழகம், கர்நாடகம், மேற்குவங்கம் உட்பட 32 அணிகள் பங்கேற்றன. தமிழக அணியில் அகில் சேது, சஞ்சய் நாராயணன், தனிஷ் ராகவன், மால்வின் ஜோஷுவா, பவ்ஜன் இடம் பெற்றனர்.
முதல் போட்டியில் தமிழக அணி 2.5-1.5 என்ற புள்ளிக்கணக்கில் ராஜஸ்தானை வென்றது. அடுத்து பஞ்சாப் (3.5-0.5), மகாராஷ்டிரா (3.0-1.0), குஜராத் (3.0-1.0) அணிகளுக்கு எதிரான போட்டி உட்பட, மொத்தம் பங்கேற்ற 6 போட்டிகளிலும் தமிழகம் வெற்றி பெற்றது. 12 புள்ளியுடன் முதலிடம் பிடித்து, தங்கம் வென்று, சாம்பியன் ஆனது.
* பெண்கள் பிரிவில் மேஹா, பவித்ரா, பூஜா ஸ்ரீ, சாருதர்ஷினி, பிரகன்யா இடம் பெற்ற தமிழக அணி, பங்கேற்ற 6 போட்டியிலும் வெற்றி பெற்றது. 12 புள்ளியுடம் முதலிடம் பெற்று, சாம்பியன் ஆனது.

Advertisement