அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆசிரியர் பணி நிரவல்

சென்னை: தொடக்கக்கல்வித் துறை இயக்குநர் நரேஷ், மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கை:

அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில், பணியாளர் எண்ணிக்கையை நிர்ணயம் செய்யும் பணிகள் நடக்கின்றன. ஏற்கனவே உள்ள, மாணவர் - ஆசிரியர் விகிதப்படி, ஆசிரியர்களின் நிர்ணய அறிக்கைகளை பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டும்.

அதில், உபரி ஆசிரியர்கள் இருப்பது கண்டறியப்பட்டால், அவர்களை பணி நிரவல் செய்யவோ அல்லது மாற்றுப்பணியில் அமர்த்தவோ, நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதற்கு, அரசு உதவிபெறும் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அவர்கள் கூறுகையில், 'வழக்குகளை காரணம் கூறி, அரசு பள்ளிகளில் இடைநிலை மற்றும் பட்டதாரி தலைமை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கவில்லை.

'அதனால், அங்கு, உபரி ஆசிரியர் பணி நிரவல் நடக்கவில்லை. அதே நிலைதான் அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் உள்ளது. அங்கு மட்டும், பணி நிரவலை உடனே நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது' என்றனர்.

Advertisement