20 கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை காவேரி மருத்துவமனை சாதனை
சேலம்:சேலம் காவேரி மருத்துவமனையில், இதுவரை, 20 கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைகள் செய்து சாதனை படைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, மருத்துவ மனையின் கல்லீரல் மாற்று சிகிச்சை பிரிவு, மூத்த பல்லுறுப்பு மாற்று சிகிச்சை நிபுணர் சுவாமிநாதன் சம்பந்தம் கூறியதாவது:
கடந்த, 2023 முதல், கல்லீரல் மாற்று சிகிச்சை சேவை எளிதாக கிடைக்க செய்வதை இலக்காக கொண்டு செயல்படுகிறோம். அதற்காக மருத்துவமனையில், கல்லீரலுக்கு என பிரத்யேக க்ளினிக், புதன்தோறும் காலை, 11:00 மணி முதல் செயல்படுகி-றது. மேலும் தமிழக அரசின் முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தில் பதிவு பெற்றுள்ளதால், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை சேவைகளை, பெரியவர்கள் மற்றும் குழந்தைக-ளுக்கு மிக குறைந்த செலவில் செய்து வருகிறோம். இதுவரை, 20 கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைகளை செய்துள்ளது மனநிறைவை தருகிறது. தவிர கல்-லீரல் செயலிழப்பு, கல்லீரல் புற்று
நோய், வளர்சிதை மாற்ற மற்றும் வைரஸ் தொடர்பான கல்லீரல் கோளாறுகள், கணைய புற்றுநோய், கணைய மாற்று அறுவை சிகிச்சை போன்று பல்வேறு உபாதைகளுக்கும், மேம்படுத்தப்-பட்ட உயர்தர சிகிச்சை அளித்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
மருத்துவமனை நிர்வாக இயக்குனர் செல்வம், துணை பொது மேலாளர் வீரமணிகண்டன், மருத்துவ நிபுணர் ரவிக்குமார், மருத்-துவ நிர்வாக அலுவலர் அபிராமி உடனிருந்தனர்.
மேலும்
-
நீரிழிவு நோய் பாதிப்பில் இந்தியாவுக்கு 2ம் இடம்
-
விமானத்தை இயக்க மறுத்த பைலட், ஊழியர்களுடன் பயணியர் மோதல்
-
பார்லி., விசாரணை குழுவுக்கு எதிரான நீதிபதி யஷ்வந்த் வர்மா மனு தள்ளுபடி பணமூட்டை விவகாரம்:
-
மஹாராஷ்டிரா மாநகராட்சி தேர்தலில், பா.ஜ. கூட்டணி அபாரம்! : தாக்கரே ஆதிக்கம் முடிந்தது
-
குற்றவாளிகளை பாதுகாக்கிறார்!
-
இந்திய கூட்டணியில் மாற்றம் வருமா: மூன்றாவது போட்டியில் எதிர்பார்ப்பு