விளக்கு பூஜையில் பங்கேற்க விண்ணப்பிக்கலாம்
தேனி: வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் வளாகத்தில் மாதந்தோறும் பவுர்ணமி விளக்கு பூஜை நடக்கிறது. இதில் நுாறு பெண் பக்தர்கள் பங்கேற்க அனுமதிக்கப்படுகின்றனர். இப்பூஜையில் பங்கேற்பவர்களுக்கு ரூ.800 மதிப்புள்ள பொருட்கள் அரசால் வழங்கப்படுகிறது.
இதில் பங்கேற்க விரும்புபவர்கள் ஒரு மாத்திற்கு முன் கோயில் அலுவலகத்தில் ரூ.100 செலுத்தி முன்பதிவு செய்வது அவசியமாகும்.
அடுத்தடுத்த விளக்கு பூஜைகளில் பங்கேற்க விரும்புபவர்கள் முன்பதிவு செய்யலாம் என அறநிலைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement