மானாமதுரை அருகே கஞ்சா பறிமுதல் இருவர் கைது

மானாமதுரை: மானாமதுரை போலீசார் அன்னவாசல் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது கீழப்பசலை கிராமத்தைச் சேர்ந்த செல்லம் மகன் கோபாலகிருஷ்ணன்19, பரமக்குடியை சேர்ந்த துரைப்பாண்டி மகன் அருண் 22, டூவீலரில் வந்தனர்.

அவர்களை சோதனை செய்த போது டூவீலர் பவுச்சில் 210 கிராம் கஞ்சா வைத்திருந்ததை பார்த்த போலீசார் இருவரையும் கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Advertisement