விடுதியில் தங்குவதற்கு பெண்கள் விண்ணப்பிக்கலாம்

தேனி: பழனிசெட்டிபட்டியில் சமூக நலத்துறை சார்பில் ரூ. 5.19 கோடி மதிப்பில் தோழி மகளிர் விடுதி அமைக்கப்பட்டு வருகிறது.

இந்த விடுதி 50 பேர் தங்கும் வகையில் படுக்கை வசதி, கண்காணிப்பு கேமரா, குடிநீர், பயோமெட்ரிக் பதிவு, சலவை இயந்திரம் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இந்த விடுதிக்கான கட்டுமான பணிகள் விரைவில் முடிவடைய உள்ளன.

இந்த விடுதியில் தேனி மாவட்டத்திற்கு வெளியூரில் இருந்து பணிக்கு வந்துள்ள பெண்கள் தங்க அனுமதிக்கப்படுவார்கள். இங்கு தங்கி பணிக்கு செல்ல விரும்பும் பெண்கள் 94999 88009 என்ற எண்ணில் விவரங்களை பதிவு செய்யலாம் என சமூக நலத்துறை அதிகாரி தெரிவித்தார்.

Advertisement