புது பஸ் ஸ்டாண்ட் நடைமேடையை ஆக்கிரமிக்கும் டூவீலர்கள்

ராஜபாளையம்: ராஜபாளையம் புது பஸ் ஸ்டாண்டில் நடைமேடை, மாற்றுத்திறனாளிகள் அறை முன்பு ஆக்கிரமித்து டூவீலர்களை நிறுத்துவதால் பயணிகள் பாதிப்பிற்கு உள்ளாகின்றனர்.

ராஜபாளையம் சங்கரன்கோவில் மெயின் ரோட்டில் புது பஸ் ஸ்டாண்ட்டில் விசாலமான நடைமேடை, மாற்றுத்திறனாளிகள் அறை பார்க்கிங் வாகனங்கள் அதிகரித்ததால் பஸ் ஸ்டாண்ட் கிழக்குப் பகுதியில் கூடுதலாக பார்க்கிங், புறக் காவல் நிலையம் என செயல்படுகிறது.

அமைத்த புதிதில் ஏ கிரேடு மதிப்பீடு பெற்று தினசரி 400 க்கும் அதிகமான ட்ரிப்புகள் என மாவட்ட தலைநகரங்கள், வெளி மாநிலங்கள் செல்ல 24 மணி நேரம் பிசியாக செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் பஸ் ஸ்டாண்ட் வடக்கு பகுதி நுழைவாயில் நடை மேடையை டூவீலர்களைக் கொண்டு போக்குவரத்து துறையினர், மின்வாரியம், சுகாதார துறை உள்ளிட்ட பல்வேறு அரசு ஊழியர்கள் ஆக்கிரமித்து நிறுத்தி செல்கின்றனர். காலையில் வெளியூர்களுக்கு செல்ல வருவோர் இப்பகுதியில் வைத்துவிட்டு இரவு வரை வாகனங்கள் நிற்கின்றன.

ஏற்கனவே இதன் அருகே மாற்றுத்திறனாளிகள் அறை இருப்பதால் டூவீலர்கள் மூலம் தடை ஏற்படுகிறது. அத்துடன் பஸ் பயணிகளும் தடுமாற வேண்டி உள்ளது. நகராட்சி துறையினரும், போலீசாரம் கண்டுகொள்ளாததால் ஆக்கிரமிப்பு தொடர்ந்து வருவதை சரி செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement