கோவையில் 'பள்ளி வழிகாட்டி 2026' கண்காட்சி தொடக்கம் முன்னணி பள்ளிகளைத் தேர்வு செய்ய பெற்றோருக்கு நல்வாய்ப்பு

கோவை: 'தினமலர்' நாளிதழ் மற்றும் எஸ்.எஸ்.வி.எம். கல்வி நிறுவனங்கள் இணைந்து நடத்தும் 'பள்ளி வழிகாட்டி 2026' நிகழ்ச்சி, கோவை அவிநாசி ரோடு, சுகுணா கல்யாண மண்டபத்தில் நேற்று (ஜன.3) தொடங்கியது. கோவை மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.

சவால்கள் நிறைந்த இன்றைய கல்விசூழலில், அதிநவீன கற்பித்தல் நுட்பங்களை கொண்ட பள்ளிகளை பெற்றோர்கள் தேடி அலையும் சிரமத்தை குறைக்கவும், நம் குழந்தைக்கு ஏற்ற சரியான பாடத்திட்டமும் வசதிகளும் கொண்ட பள்ளியை தேர்வு செய்வதில் ஏற்படும் குழப்பங்களை தீர்க்கவும் இந்நிகழ்ச்சி வழிகாட்டுகிறது.

சி.பி.எஸ்.இ., ஐ.சி.எஸ்.இ., ஐ.பி. உள்ளிட்ட பல்வேறு பாடத்திட்டங்களை வழங்கும் 60க்கும் மேற்பட்ட முன்னணி பள்ளிகளின் செயல்பாடுகளை ஒரே இடத்தில் கேட்டறிந்து, சிறந்த பள்ளியை தேர்வு செய்யும் வாய்ப்பை தினமலரின் 'பள்ளி வழிகாட்டி 2026' நிகழ்ச்சி வழங்குகிறது.

Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
மோகன்தாஸ், நிர்வாக அறங்காவலர், எஸ்.எஸ்.வி.எம் கல்வி நிறுவனங்கள்: மாணவர்களை சிறந்த குடிமக்களாக உருவாக்குவதில் பள்ளிகளே அடித்தளமாக திகழ்கின்றன. படைப்பாற்றல், தொழில்நுட்ப அறிவு, தலைமைத்துவ பண்புகளை வளர்க்கும் நவீன வசதிகள் கொண்ட பள்ளிகளை பெற்றோர்கள் தேர்வு செய்வது அவசியமாகியுள்ளது. மாறும் காலத்திற்கேற்ப டிஜிட்டல் கற்றல் மற்றும் ஆராய்ச்சித் திறனை ஊக்குவிக்கும் பள்ளிகளே குழந்தைகளின் எதிர்காலத்தை வெற்றிகரமாக கட்டமைக்கும். அதேபோல், எங்கள் பள்ளியில் தரமான கல்விக்கே முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

ஒவ்வொரு பள்ளியும் தங்களுக்கென உள்ள தனித்திறன்களை இந்நிகழ்ச்சி அரங்குகள் வாயிலாக வெளிப்படுத்துகின்றன. 'பள்ளி வழிகாட்டி' நிகழ்ச்சியில் பங்கேற்பதன் மூலம், குழந்தைக்கு எது சிறந்ததோ அதை தேர்வு செய்து வழங்க பெற்றோர்களுக்கு வாய்ப்பு கிடைக்கிறது.

மோகன் சந்தர், தாளாளர், நேஷனல் மாடல் பள்ளி: கல்வித் துறையில் போட்டிகள் அதிகரித்துள்ள நிலையில், புதுமையான கற்பித்தல் முறைகளை பெற்றோர்கள் ஆர்வத்துடன் தேடுகின்றனர். ஒவ்வொரு பள்ளிக்கும் நேரில் சென்று தகவல்களைத் திரட்டுவதில் உள்ள சிரமங்களைப் போக்கி, ஒரே இடத்தில் சந்தேகங்களைத் தெளிவுபடுத்திக் கொள்ள இந்த வழிகாட்டி நிகழ்ச்சி ஒரு சிறந்த தீர்வாகும்.

ராஜேஷ் வாசுதேவன், தலைமை நிர்வாக அதிகாரி, மான்செஸ்டர் சர்வதேச பள்ளி: எங்கள் பள்ளியில் சர்வதேச தரத்திலான சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் மூலம் மாணவர்களின் பகுப்பாய்வுத் திறன் மேம்படுத்தப்படுகிறது. மாணவர்களின் தனித்திறன்களைக் கண்டறிந்து, அவர்களைத் தேசிய மற்றும் சர்வதேச அளவிலான போட்டித் தேர்வுகளுக்குத் தயார் செய்கிறோம். வெறும் ஏட்டுக்கல்வி மட்டுமன்றி, செயல்முறை வழிக் கற்றல் வாயிலாக தலைமைத்துவப் பண்புகளை மாணவர்களிடம் வளர்ப்பது அவசியம்.

குமாரி பத்மினி, முதல்வர், அத்வைத் தாட் அகாடமி: பத்தாண்டுகளுக்கு முந்தைய கல்வி முறை இப்போது முற்றிலும் மாறிவிட்டது. இன்றைய சூழலில் ஆரம்பக் கல்வி மிக முக்கியமானது. குழந்தைகளின் விளையாட்டு மற்றும் ஆர்வத்தின் அடிப்படையிலேயே எங்கள் கற்பித்தல் அமைகிறது.

கல்வியுடன் விளையாட்டு மற்றும் தனித்திறன்களை மேம்படுத்தி, மாணவர்களை தன்னம்பிக்கை மிக்க சாதனையாளர்களாக மாற்றுவதே எங்கள் இலக்கு.

Advertisement