போச்சம்பள்ளியில் வாகன நெரிசல்

போச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி, சந்துார், கல்லாவி, திருப்பத்துார், தர்மபுரி சாலைகளில் ஜவுளி, எலக்ட்ரானிஸ், நகை கடைகள் என, பெரும் வணிக நிறுவனங்கள் அதிகளவு உள்ளது. அதே போல் டிபார்ட்மென்டல் ஸ்டோர்கள் உள்ளன.

இவைகளில் பொங்கல் பண்டிகை என்பதால், போச்சம்பள்ளி சுற்று வட்டாரத்திலுள்ள, 50க்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து விவசாயிகள், பொதுமக்கள் நேற்று காலை 8:00 மணி முதல், போச்சம்பள்ளியில் பொருட்களை வாங்க இரண்டு, நான்கு சக்கர வாகனங்களில் குவிந்தனர். இதனால் போச்சம்பள்ளி நான்கு ரோடு சந்திப்பில், அதிகளவு போக்குவரத்து வாகன நெரிசல் ஏற்பட்டு, வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டது.

பொதுமக்களில் ஒரு சிலரும், போலீசாரும் போக்குவரத்தை சரி செய்தனர். இதனால் போச்சம்பள்ளியில், 2 மணி நேரத்திற்கும் மேலாக, போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Advertisement