இரவிகுளம் பூங்காவில் வரையாடுகள் பிரசவம் முன் கூட்டியே துவங்கியது
மூணாறு: கேரள மாநிலம் மூணாறு அருகே இரவிகுளம் தேசிய பூங்காவில் வழக்கத்தை விட முன்கூட்டியே வரையாடுகள் பிரசவிக்க துவங்கின.
அங்கு அபூர்வ இன வரையாடு ஏராளமாக உள்ளன. அவற்றை பார்க்க பூங்காவுக்கு உட்பட்ட ராஜமலைக்கு சுற்றுலா பயணிகளை வனத்துறையினர் அனுமதிக்கின்றனர். ஆண்டு தோறும் ஜூன், ஜூலையில் சாரல் மழையின்போது வரையாடுகள் இனப்பெருக்கத்தில் ஈடுபடும். பிரசவ காலம் பிப்ரவரியில் துவங்கி மார்ச் இறுதி வரை நீடிக்கும். அப்போது ராஜமலைக்கு பயணிகள் செல்ல அனுமதி மறுக்கப்படும்.
அதற்கு முன் ஜனவரியில் வனக்காவலர்கள் அவற்றை கண்காணிப்பது வழக்கம். அவ்வாறு கண்காணிக்கப்பட்டதில் தற்போது வழக்கத்தை விட முன் கூட்டியே ராஜமலையில் குட்டிகள் பிறந்ததாக தெரியவந்தது.
அதனால் வழக்கம் போல் பிப்., 1 ல் பூங்கா அடைக்க வாய்ப்புள்ளது. கடந்தாண்டு ஏப்ரலில் நடந்த கணக்கெடுப்பில் இப்பூங்காவில் புதிதாக பிறந்த குட்டிகள் உட்பட 841 வரையாடுகள் உள்ளதாக தெரியவந்தது.
மேலும்
-
ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் அமைப்பதில் இளைஞர்கள் ஆர்வம்: பிரதமர் மோடி
-
கவுரி லங்கேஷ் கொலை வழக்கில் கைதானவர் மஹா. உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி!
-
வளம் மிக்க துறைகளை காங்கிரஸ் தேடிப்போவதில்லை; மாணிக்கம் தாகூர் சொல்லாமல் விட்டது இதுதான்!
-
ஸ்டார்ட் அப் இந்தியா திட்டத்தின் 10ம் ஆண்டு நிறைவு விழா; பிரதமர் மோடி பங்கேற்பு
-
வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீதான தாக்குதல்; பிரிட்டன் பார்லியில் எம்பி காட்டம்
-
பண்டிகை நாளிலும் போராட்டம்; சென்னையில் 22வது நாளாக போராடிய ஆசிரியர்கள் கைது