ஒரே கூரையின் கீழ் விடை தந்த 'பள்ளி வழிகாட்டி'
'தினமலர்' நாளிதழ் மற்றும் எஸ்.எஸ்.வி.எம். கல்வி நிறுவனங்கள் இணைந்து நடத்தும் 'பள்ளி வழிகாட்டி 2026' நிகழ்ச்சியில், ஒரே கூரையின் கீழ் 60க்கும் மேற்பட்ட பள்ளி நிறுவனங்கள் பங்கேற்றன. இதை பார்வையிட்டவர்கள் தங்கள் கருத்துகளை பகிர்ந்தனர்.





குழப்பம் தீர்ந்தது அடுத்த ஆண்டு என் பிள்ளையை பள்ளியில் சேர்க்க வேண்டும். சி.பி.எஸ்.இ., ஐ.சி.எஸ்.இ. உள்ளிட்ட பல பாடத்திட்டங்களை வழங்கும் பள்ளிகளில் சிறந்த பள்ளியை தேர்வு செய்வது கடினம். தற்போதைய சூழலில் ஒரே நாளில், நமது விருப்ப பட்டியலில் உள்ள பள்ளிகளுக்கு நேரடியாக சென்று, கற்றல் முறைகளை கேட்டறிவது சிரமம். ஆனால், இதுபோன்ற நிகழ்ச்சி தீர்வாக அமைகின்றன.
-கீர்த்தனா, சேரன் மாநகர்
தினமலருக்கு நன்றி குழந்தைக்கு சிறந்த கல்வியை உயர்கல்வியில் மட்டுமல்ல, பள்ளிக்கல்வியிலும் வழங்க வேண்டும். குழந்தையை சிறந்த பள்ளியில் சேர்க்க விரும்பும் பெற்றோர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு. பள்ளிகளில் வழங்கப்படும் கற்றல் முறைகள் குறித்த தெளிவான புரிதல் கிடைத்தது.
-பசுபதி, திருப்பூர்
ஒவ்வொரு பள்ளிகளுக்கும் நேரில் சென்று அவர்களின் கற்பித்தல் முறைகள், விளையாட்டு வசதிகள், கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப வசதிகளைப் பார்த்துத் தெரிந்துகொள்வது என்பது மிகவும் சிரமம். ஆனால், ஒரே நாளில் அந்த வாய்ப்பு இங்கே கிடைக்கிறது.
எதிர்காலத்திற்கான முதல் படி -அபிராமி, ஆவாரம்பாளையம்
மெட்ரிக், சி.பி.எஸ்.இ., ஐ.சி.எஸ்.இ. என பாடத்திட்டங்களை வழங்கும் பள்ளிகளுக்கிடையே போட்டிகள் அதிகம். எனது மகளை எந்த பள்ளியில் சேர்க்க வேண்டும் என்பதை தீர்மானிக்க இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன். பள்ளிக் கட்டணம் முதல் விளையாட்டு, யோகா, கலை வழிக் கற்றல் என அனைத்து சிறப்பம்சங்களையும் தெரிந்துகொள்ள இது உதவுகிறது.
உதவியாக இருந்தது -ராதிகா, உடுமலை
பள்ளிகளின் விவரங்களை ஆன்லைன், தொலைபேசி வாயிலாகக் கேட்டுத் தெரிந்துகொள்வதைவிட, இதுபோன்ற பள்ளி வழிகாட்டி நிகழ்ச்சிகளில் முன்னணி பள்ளிகளில் உள்ள வசதிகள் மற்றும் புதுமைகளை ஆசிரியர்களுடன் நேரடியாகக் கலந்துரையாடித் தெரிந்துகொள்வது சிறப்பாக இருக்கிறது.
விடை கிடைத்தது -பவித்ரா, மேட்டுப்பாளையம்
எனது குழந்தையைப் பிரிகேஜியில் சேர்க்க வேண்டும். எந்த பள்ளியில் சேர்க்கிறோமோ அதற்கு ஏற்ப வீட்டை மாற்ற வேண்டும். இந்த சூழ்நிலையில், இந்தப்பள்ளி வழிகாட்டி நிகழ்ச்சி மிகவும் உதவியாக இருந்தது. பள்ளிகள் குறித்து நல்ல புரிதல் ஏற்பட்டுள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
'ஜாதி, மத பேதமின்றி மக்கள் சேவை செய்தவர் குருநானக்'
-
67 லட்சம் பேர் வேலைக்காக பதிவு : காலியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்
-
பழநியில் 5 மணி நேரம் காத்திருந்து தரிசனம்
-
பள்ளி சாரா, வயது வந்தோர் கல்வி திட்டம்: சிறந்த சி.இ.ஓ.,க்களுக்கு விருது
-
வங்கியில் போலி நகை அடகு வைத்து ரூ.17 லட்சம் மோசடி: மதிப்பீட்டாளர் உட்பட மூவர் கைது
-
காஷ்மீர் எல்லையில் மீண்டும் தென்பட்டது பாக் ட்ரோன்கள்; சுட்டு வீழ்த்தியது இந்திய ராணுவம்
Advertisement
Advertisement