காஷ்மீர் எல்லையில் மீண்டும் தென்பட்டன பாக் ட்ரோன்கள்; சுட்டு வீழ்த்தியது இந்திய ராணுவம்

4


ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் எல்லையில் மீண்டும் பாகிஸ்தான் ட்ரோன்கள் தென்பட்டன. இதனை அறிந்து சுதாரித்துக் கொண்ட இந்திய ராணுவத்தினர் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தினர்.


இந்தியா - பாகிஸ்தான் இடையிலான எல்லை பகுதியையொட்டிய சம்பா, ராம்கார், பூஞ்ச் மாவட்டத்திலுள்ள தேக்வார் பகுதிகளில் நேற்று இரவு பாகிஸ்தான் ட்ரோன்கள் தென்பட்டுள்ளன. எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த வீரர்கள் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தினர்.


கடந்த ஒரு வாரத்தில் மட்டும் மூன்றாவது முறையாக சர்வதேச எல்லையில் பாகிஸ்தானின் ட்ரோன்கள் தென்பட்டுள்ளன. இதனால் எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என ராணுவம் தெரிவித்துள்ளது. ஜனவரி 11 முதல் 15ம் தேதி வரையில் 15 ட்ரோன்கள் எல்லைப் பகுதியில் அத்துமீறி நுழைந்ததாக பாதுகாப்பு படை அதிகாரிகள் தெரிவித்தனர்.


இந்த வாரம் எல்லையில் மீண்டும் மீண்டும் பாகிஸ்தான் ட்ரோன்கள் காணப்பட்ட சம்பவங்களுக்கு மத்தியில், ராணுவத் தலைமைத் தளபதி உபேந்திர திவேதி பாகிஸ்தானுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்து இருக்கிறார். எதிரியின் ஒவ்வொரு அசைவையும் ஆயுதப் படைகள் உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக உபேந்திர திவேதி கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement