6,795 மின்னணு ஓட்டுப்பதிவு முதல்நிலை சரிபார்ப்பு பணி
கரூர்: கரூர் மாவட்டத்தில், 6,795 மின்னணு ஓட்டுப்ப-திவு இயந்திரங்கள் முதல்நிலை சரிபார்ப்பு பணி நிறைவடைந்துள்ளது.
கரூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில், மின்-னணு ஓட்டுப்பதிவு இயந்திர கிடங்கில், அங்கீக-ரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னி-லையில், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் முதல்நிலை சரிபார்ப்பு பணி நடந்தது. இதை கலெக்டர் தங்கவேல் ஆய்வு செய்த பின் கூறிய-தாவது:
கடந்த, 11 முதல் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்-திரம் சரிபார்ப்பு பணிகள் நடந்தன. இங்கு, 4,855 ஓட்டுப்பதிவு கருவிகள், 1,486 கட்டுபாட்டுகரு-விகள், 1,618 ஓட்டுச்சீட்டு சரிபார்ப்பு கருவிகள் என மொத்தம், 7,959 மின்னணு இயந்திரங்களில் முதல்நிலை சரிபார்ப்பு பணிகள் செய்யப்பட்டது. இதனை பெல் நிறுவனத்தை சார்ந்த, 8 மென்பொ-றியாளர்கள் மேற்கொண்டனர். தற்போது வரை 4,287 ஓட்டுப்பதிவு கருவிகள், 1,202 கட்டுபாட்டு கருவிகள், 1,306 ஓட்டு சீட்டு சரிபார்ப்பு கருவிகள் என மொத்தம், 6,795 மின்னணு ஓட்டுப்பதிவு இயந்-திரங்களில் முதல்நிலை சரிபார்ப்பு பணி நிறைவ-டைந்துள்ளது. மீதமுள்ள ஓட்டுபதிவு இயந்திரங்-களில் சரிபார்ப்பு பணிகள் தொடர்ந்து நடக்கிறது. இவ்வாறு கூறினார்.
மேலும்
-
நீரிழிவு நோய் பாதிப்பில் இந்தியாவுக்கு 2ம் இடம்
-
விமானத்தை இயக்க மறுத்த பைலட், ஊழியர்களுடன் பயணியர் மோதல்
-
பார்லி., விசாரணை குழுவுக்கு எதிரான நீதிபதி யஷ்வந்த் வர்மா மனு தள்ளுபடி பணமூட்டை விவகாரம்:
-
மஹாராஷ்டிரா மாநகராட்சி தேர்தலில், பா.ஜ. கூட்டணி அபாரம்! : தாக்கரே ஆதிக்கம் முடிந்தது
-
குற்றவாளிகளை பாதுகாக்கிறார்!
-
இந்திய கூட்டணியில் மாற்றம் வருமா: மூன்றாவது போட்டியில் எதிர்பார்ப்பு