தோல்வி பயத்தில் நடுங்கும் திமுக; ரூ.3000 பொங்கல் பரிசுத்தொகை அறிவிப்பை விமர்சித்த அன்புமணி
சென்னை: பொங்கல் பரிசுத் தொகை ரூ.3000: தோல்வி பயத்தில் திமுக நடுங்கிக் கொண்டிருப்பதை காட்டுகிறது என்று பாமக தலைவர் அன்புமணி விமர்சித்து உள்ளார்.
இதுகுறித்து அவரது அறிக்கை;
தமிழர் திருநாளாம் தைப்பொங்கலையொட்டி அரிசி குடும்ப அட்டை வைத்திருக்கும் அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் தலா ரூ.3,000 வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. திமுக ஆட்சியில் மக்கள் அனுபவித்து வரும் துயரங்களை ஓரளவாவது தணிக்கும் வகையில், அவர்களிடமிருந்து பறிக்கப்பட்ட பணத்தில் ஒரு பகுதி அவர்களுக்கு வழங்கப்படுவது சரியானதே.
கடந்த ஆண்டும் இதே காலத்தில் தைப்பொங்கல் கொண்டாடப்பட்டது. ஆனால், மக்களுக்கு ஒரு பைசா கூட பொங்கல் பரிசாக திமுக அரசு வழங்கவில்லை. ஆனால், இப்போது வழங்குகிறது. திமுக ஆட்சிக்கு வந்த நாளில் இருந்தே அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதியம் கோரி போராடி வருகின்றனர். ஆனால், அவர்களை திரும்பிக் கூட பார்க்காத திமுக அரசு, இப்போது அவர்களை ஏமாற்றும் வகையில் ஒரு மோசடி ஓய்வூதியத் திட்டத்தை அறிவித்திருக்கிறது.
இன்னும் 50 நாள்களில் அறிவிக்கப்படவுள்ள சட்டசபைத் தேர்தலில் தோல்வியடைந்து விடுவோம் என்று அஞ்சி நடுங்கிக் கொண்டிருக்கும் திமுக அரசு , அதிலிருந்து தப்புவதற்காகவே இத்தகைய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. ஆனால், தமிழக மக்கள் தாங்கள் ஏற்கனவே எடுத்த முடிவில் இருந்து பின்வாங்கப் போவதில்லை. அவர்கள் நிச்சயமாக வரும் தேர்தலில் திமுகவை வீழ்த்துவார்கள்.
இவ்வாறு அன்புமணி விமர்சித்துள்ளார்.
வாசகர் கருத்து (2)
Santhakumar Srinivasalu - ,
04 ஜன,2026 - 18:03 Report Abuse
பொங்கல் பணம் கொடுப்பதால் அன்புமணிக்கு பயம்! 0
0
Reply
T.sthivinayagam - agartala,இந்தியா
04 ஜன,2026 - 17:16 Report Abuse
விமர்சனம் வைப்பதில் நீங்கள் பாஜக தலைவர் நைனார் நாகேந்திரன் அவர்களை பின்னுக்கு தள்ளி விட்டிர்கள் என்று தொண்டர்கள் பாராட்டுகின்றனர். 0
0
Reply
மேலும்
-
எதிர்காலப் போர்களுக்கு தயாராகி வருகிறோம்; ராணுவத் தளபதி உபேந்திர திவேதி பேச்சு
-
ஈரானில் இந்திய மாணவர்களின் பாஸ்போர்ட்டுகளை பறித்து அடவாடி; மத்திய அரசுக்கு ஓவைசி வலியுறுத்தல்
-
இந்த முறை தோட்டாக்கள் தப்பாது... அதிபர் டிரம்புக்கு ஈரான் அரசு டிவி மிரட்டல்
-
ஜனநாயகன் பட விவகாரம்; விஜய் தரப்பு மேல்முறையீட்டு மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
-
ராணுவ தினத்தன்று வீரர்களுக்கு சல்யூட்; வீரர்களின் சேவையை நினைவு கூர்ந்த ஜனாதிபதி திரவுபதி முர்மு, ராஜ்நாத் சிங்
-
அனைவரும் நல்லா இருக்கணும்; ரஜினி பொங்கல் வாழ்த்து
Advertisement
Advertisement