ராணுவ தினத்தன்று வீரர்களுக்கு சல்யூட்; வீரர்களின் சேவையை நினைவு கூர்ந்த ஜனாதிபதி திரவுபதி முர்மு, ராஜ்நாத் சிங்
புதுடில்லி: ராணுவ தினத்தை முன்னிட்டு, ராணுவ வீரர்களின் தியாகத்தையும், நாட்டிற்கான தன்னலமற்ற சேவையையும் நினைவுகூர்ந்து, ஜனாதிபதி திரவுபதி முர்மு, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.
இது குறித்து ஜனாதிபதி திரவுபதி முர்மு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ராணுவ தினத்தன்று நமது துணிச்சலான வீரர்கள், முன்னாள் வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். நமது நாட்டின் ஒற்றுமை, இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதில் இந்திய ராணுவம் உறுதியாக உள்ளது.
பேரிடர்கள் மற்றும் மனிதாபிமான நெருக்கடிகளின் போது நமது வீரர்கள் நமது எல்லைகளைப் பாதுகாக்கிறார்கள் மற்றும் முக்கியமான உதவிகளை வழங்குகிறார்கள். தேசமே முதன்மை என்று இருக்கும் ராணுவ வீரர்களின் அசைக்க முடியாத உணர்வு ஒவ்வொரு இந்தியருக்கும் தொடர்ந்து ஊக்கமளிக்கிறது. இவ்வாறு ஜனாதிபதி திரவுபதி முர்மு கூறியுள்ளார்.
ராஜ்நாத்சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நமது துணிச்சலான இந்திய ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு ராணுவ தினத்தின் பெருமைமிகுந்த நாளில் வாழ்த்துக்கள். இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதில் அவர்களின் அயராத துணிச்சல், உயர்ந்த தியாகம் மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்கு தேசம் வணக்கம் செலுத்துகிறது.
நமது எல்லைகளில் எப்போதும் விழிப்புடன் இருந்து, நெருக்கடியான காலங்களில் உறுதியுடன் செயல்படும் இந்திய ராணுவம் மனிதாபிமான சேவை மூலம் உலகளாவிய மரியாதையைப் பெற்றுள்ளது. தன்னம்பிக்கை கொண்ட பாரதத்தின் எதிர்காலத்திற்குத் தயாராக இருக்கும் ராணுவத்தை உருவாக்குவதில் நமது அரசு முழுமையாக உறுதிபூண்டுள்ளது. இவ்வாறு ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்திய ராணுவ வீரர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் ராணுவ தினத்தன்று மனமார்ந்த வாழ்த்துக்கள். அவர்களின் வீரத்தின் முழக்கம் நமது வரலாற்றின் பக்கங்களில் எதிரொலிக்கிறது, ஒவ்வொரு தலைமுறை இந்தியர்களிடையேயும் தேசபக்தியின் உணர்வு பிரதிபலிக்கிறது. இவ்வாறு அமித்ஷா கூறியுள்ளார்.
பொங்கல், மகர சங்கராந்தி கொண்டாடும் இந்த நல்ல நேரத்தில், நாட்டுக்காக பணியாற்றிய, பணியாற்றிக்கொண்டிருக்கும் ராணுவவீரர்களை நினைவுகூர்ந்து அவர்களுக்கு நம் வாழ்த்துக்களையும், வீரவணக்கத்தையும் கூறவேண்டும். ஜெய்ஹிந்த். வந்தே மாதரம்.
சல்யூட் ஜெய்ஹிந்த்மேலும்
-
எம்ஜிஆர் பிறந்தநாள் சிறப்புப்பதிவு; எம்ஜிஆர் தழுவிய சட்டை தொண்டர் வீட்டில் அலங்கரிப்பு
-
நவீன ஜல்லிக்கட்டு போட்டி
-
விசைத்தறியை நவீன மயமாக்கும் சப்ளையர் திட்டத்தில் சேர விண்ணப்பிக்க அழைப்பு
-
இலக்கிய பேரவை திருவள்ளுவர் தினம் கொண்டாட்டம்
-
மாட்டுப்பொங்கல் கோலாகலம்
-
தை மாத பிரதோஷத்தையொட்டி ஏகாம்பர ஈஸ்வரருக்கு சிறப்பு பூஜை