அனைவரும் நல்லா இருக்கணும்; ரஜினி பொங்கல் வாழ்த்து

19

சென்னை: அனைவரும் நல்லா இருக்க வேண்டும். விவசாயிகள் நாட்டின் முதுகெலும்பு என வீட்டின் முன் குடியிருந்த ரசிகர்களுக்கு பொங்கல் வாழ்த்து கூறிய பிறகு, நடிகர் ரஜினி நிருபர்களிடம் தெரிவித்தார்.


சென்னை போயஸ்கார்டன் இல்லத்தின் முன்பு குவிந்த ரசிகர்களுக்கு நடிகர் ரஜினி பொங்கல் வாழ்த்து கூறினார். பின்னர் நிருபர்களிடம் நடிகர் ரஜினி கூறியதாவது: அனைவருக்கும் என்னுடைய பொங்கல் நல்வாழ்த்துக்கள். எல்லோரும் நல்லா இருக்க வேண்டும்.


முக்கியமாக விவசாயிகள் இந்த நாட்டின் முதுகெலும்பு. அவர்கள் சந்தோசமாக, மகிழ்ச்சியாக இருந்தால்தான் எல்லோரும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் நான் நடிக்கும் படம் ஏப்ரலில் தொடங்குகிறது. அது கமர்சியல், எண்டர்டெயின்மெண்ட் படம், நன்றி. இவ்வாறு நடிகர் ரஜினி கூறினார்.
Tamil News
Tamil News
Tamil News

Advertisement