பார்லிமென்டில் விவாதத்தின் போது ராகுல் எங்கே போனார்; காங்கிரசை விளாசிய மத்திய அமைச்சர் சிவராஜ் சவுகான்
புதுடில்லி: 100 நாள் வேலை திட்டத்திற்கு மாற்றாக கொண்டுவரப்பட்ட மசோதா மீதான விவாதத்தின் போது பார்லிமென்டில் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் பங்கேற்கவில்லை. அப்போது அவர் எங்கே போனார்? என மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் கேள்வி எழுப்பி உள்ளார்.
மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது, 100 நாட்கள் வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டம் அமலானது. கடந்த டிசம்பரில் மத்திய அரசு, இத்திட்டத்தின் கீழான வேலை நாட்களை, 125 ஆக அதிகரித்ததுடன், 'வி.பி.,- ஜி ராம் -ஜி' என்ற, 'விக்சித் பாரத் கியாரன்டி பார் ரோஜ்கர் அண்டு அஜீவிகா மிஷன் - கிராமின்' என்று பெயர் மாற்றமும் செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜனவரி 10 முதல் பிப்ரவரி 25 வரை போராட்டம் நடைபெறும் என காங்கிரஸ் தரப்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக டில்லியில் நிருபர்களிடம் சிவராஜ் சவுகான் கூறியதாவது: காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டத்தின் கீழ் ஊழல் அதிகமாக இருந்தது. 100 நாள் வேலை திட்டத்திற்கு மாற்றாக கொண்டுவரப்பட்ட மசோதா மீதான விவாதத்தின் போது பார்லிமென்டில் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் பங்கேற்கவில்லை.
அப்போது அவர் எங்கே போனார்? 'வி.பி.,- ஜி ராம் -ஜி' சட்டம் குறித்து பொய்களைப் பரப்புவதை காங்கிரஸ் நிறுத்த வேண்டும். இந்தத் திட்டத்தை சிறப்பாகச் செய்ததற்காக" பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி சொல்ல வேண்டும்.
அடுத்த ஆண்டு இந்தத் திட்டத்திற்காக, ரூ.1,51,282 கோடி ஒதுக்கப்படும். இதில் ரூ.95,600 கோடி மத்திய அரசால் ஒதுக்கப்படும். இந்தத் தொகை 125 நாட்களுக்குப் போதுமானதாகவும், கிராமங்களின் வளர்ச்சியை உறுதி செய்யும். புதிய திட்டம் தொழிலாளர்களின் நலன்களைப் பாதுகாக்கும். பழைய திட்டத்தை விட மிகவும் சிறந்தது. இவ்வாறு சிவராஜ் சவுகான் கூறினார்.
ராகுல் ஊர் சுற்ற போனார், இத்தாலி, இங்கிலாந்து, ஜெர்மனி என்று பலநாடுகளுக்கு.
போய் இந்துர் சுகாதாரத்தைப் பாரு.
முதலில் ஓசிக்கு ஆசைப்படாமல் உழைத்து குடும்பத்தை காப்பாற்று
நம் பாரத நாட்டிற்கு படையெடுத்து வந்து பலரை கொன்று கொடுங்கோல் ஆட்சி நடத்திய முகலாயர்களும், அவர்களுக்கு பின் வணிகம் செய்ய வந்து நயவஞ்சகமாக ஆட்சியை பிடித்து பல செல்வ வளங்களை கொள்ளையடித்த வெள்ளையர்களும் நம்
இந்திய நாட்டுக்கு செய்த துரோகங்களை விட பல மடங்கு துரோகத்தை இப்போதுள்ள இத்தாலி காங்கிரஸ் கட்சியில் உள்ள ராகுல்காந்தி செய்து வருகிறார். ராகுல்காந்தி ஒவ்வொரு முறை வெளிநாடு சென்று விட்டு இந்தியா திரும்பும் போதும் நம் நாட்டில் ஏதோ ஒரு அசம்பாவிதம் நடக்கும் தருவாயில் அது மோடியின் அரசால் வெற்றிகரமாக முறியடிக்கப் பட்டிருக்கிறது என்பது இங்கு பலருக்கும் தெரியாது.
நாடும்... நாட்டு மக்களும் எக்கேடு கெட்டால் அவருக்கு என்ன ?மேலும்
-
67 லட்சம் பேர் வேலைக்காக பதிவு : காலியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்
-
பழநியில் 5 மணி நேரம் காத்திருந்து தரிசனம்
-
பள்ளி சாரா, வயது வந்தோர் கல்வி திட்டம்: சிறந்த சி.இ.ஓ.,க்களுக்கு விருது
-
வங்கியில் போலி நகை அடகு வைத்து ரூ.17 லட்சம் மோசடி: மதிப்பீட்டாளர் உட்பட மூவர் கைது
-
காஷ்மீர் எல்லையில் மீண்டும் தென்பட்டது பாக் ட்ரோன்கள்; சுட்டு வீழ்த்தியது இந்திய ராணுவம்
-
தமிழக மக்களுக்கு 4 வாக்குறுதிகளை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின்