டேமியன் மார்டின் உடல்நிலை முன்னேற்றம்

1

மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவின் டேமியன் மார்டின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் டேமியன் மார்டின் 54. 'டாப்--ஆர்டர்' பேட்டரான இவர், 1992ல் சர்வதேச கிரிக்கெட்டில் (பிரிஸ்பேன் டெஸ்ட், எதிர்: வெ.இண்டீஸ்) காலடி வைத்தார். உலக கோப்பை (1999, 2003), சாம்பியன்ஸ் டிராபி (2006) வென்ற ஆஸ்திரேலிய அணியில் இடம் பெற்றார். 2006ல் ஓய்வு பெற்ற இவர், சிறிது காலம் வர்ணனையாளராக பணியாற்றினார்.

சமீபத்தில் டேமியன் மார்டின் (மூளைக்காய்ச்சல்), பிரிஸ்பேனில் உள்ள கோல்டு கோஸ்ட் பல்கலை., மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். தற்போது தேறி வருகிறார்.
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர்- பேட்டர் கில்கிறிஸ்ட் கூறுகையில், ''டேமியன் மார்டின் உடல்நிலையில், கடந்த 48 மணி நேரத்தில் நம்ப முடியாத நிகழ்வுகள் நடந்துள்ளன. 'கோமா' நிலையில் இருந்து மீண்டு, விரைவாக குணமடைந்து வருகிறார். தற்போது இவரால் பேச முடிகிறது. சிகிச்சைக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கிறார். இவரது உடல்நிலை முன்னேற்றம் அதிசயமானது. அவர் மருத்துவமனையில் தங்கி தொடர்ந்து சிகிச்சை பெறுவார்,'' என்றார்.

Advertisement