'கிராண்ட்மாஸ்டர்' ஆர்யன்

புதுடில்லி: இந்தியாவின் புதிய கிராண்ட் மாஸ்டர் ஆனார் ஆர்யன் 21.
ஆர்மேனியாவில் சர்வதேச செஸ் தொடர் நடக்கிறது. இந்தியா சார்பில் சர்வதேச மாஸ்டர் அந்தஸ்து பெற்ற ஆர்யன் வர்ஷ்னே 21, உட்பட 10 பேர் பங்கேற்கின்றனர். இதில் ஆர்யன், ஆர்மேனியானின் டைக்ரானை் மோதிய போட்டி 8வது சுற்று 'டிரா' ஆனது. இதையடுத்து, 8 சுற்றில் 6.5 புள்ளி பெற்ற ஆர்யன், கிராண்ட்மாஸ்டர் பட்டம் பெறுவதற்கான, மூன்றாவது அந்தஸ்தை எட்டினார்.
கடந்த 2024ல் முதலில் சர்வதேச மாஸ்டர் ஆனார். அடுத்து கிரீஸ், வங்கதேச தொடரில் அசத்திய டில்லியை சேர்ந்த ஆர்யன், இரண்டாவது அந்தஸ்தை எட்டினார். தற்போது ஆர்மேனிய தொடரில் சிறப்பாக செயல்பட, இந்தியாவின் 92வது கிராண்ட்மாஸ்டர் ஆனார்.
பரிமார்ஜன் நேகி, அபிஜீத் குப்தா, ஸ்ரீராம் ஜா, வைபவ் சூரி, சஹாஜ் குரோவர், ஆர்யன் சோப்ரா, பிரிது குப்தாவை தொடர்ந்து டில்லியின் 8வது கிராண்ட்மாஸ்டர் ஆனார் ஆர்யன் வர்ஷ்னே.

Advertisement