'டி-20' அணியில் ஷ்ரேயஸ் ஐயர்

1

புதுடில்லி: இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி, ஐந்து 'டி-20' போட்டி கொண்ட தொடரில் பங்கேற்கிறது. போட்டிகள், நாக்பூர் (ஜன. 21), ராய்ப்பூர் (ஜன. 23), கவுகாத்தி (ஜன. 26), விசாகப்பட்டினம் (ஜன. 28), திருவனந்தபுரத்தில் (ஜன. 31) நடக்கவுள்ளன.
இதற்கான இந்திய அணியில் இடம் பெற்ற திலக் வர்மா (விதைப்பை) ஆப்பரேஷன் செய்துள்ளார். இவருக்குப் பதில் முதல் 3 போட்டிக்கு, ஷ்ரேயஸ் ஐயர் சேர்க்கப்பட்டுள்ளார்.
'ஆல் ரவுண்டர்' வாஷிங்டன் சுந்தர், இடது கீழ் விலா பகுதியில் ஏற்பட்ட காயத்தால் விலகினார். இவருக்கு மாற்றாக, ரவி பிஷ்னோய் வாய்ப்பு பெற்றுள்ளார்.
அணி விபரம்: சூர்யகுமார் (கேப்டன்), அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், ஷ்ரேயஸ் ஐயர், ஹர்திக் பாண்ட்யா, ஷிவம் துபே, அக்சர் படேல், ரிங்கு சிங், பும்ரா, ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங், குல்தீப், வருண் சக்ரவர்த்தி, இஷான் கிஷான், ரவி பிஷ்னோய்.

Advertisement