அமெரிக்காவின் நடவடிக்கைக்கு போதைப்பொருள் காரணமில்லை: வெனிசுலாவில் கொட்டி கிடக்கும் கச்சா எண்ணெயே குறி
கரகாஸ்: 'அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கைக்கு போதைப்பொருள் கடத்தல் முக்கிய காரணமில்லை. தங்கள் நாட்டில் கொட்டிக்கிடக்கும் ஏராளமான எண்ணெய் வளங்களை குறிவைத்தே அமெரிக்கா ஆக்கிரமிப்பில் இறங்கியுள்ளது' என, வெனிசுலா அதிபர் மதுரோவின் ஆதரவாளர்கள் கூறியுள்ளனர்.
தென் அமெரிக்க நாடான வெனிசுலா, நிரூபிக்கப்பிட்ட கச்சா எண்ணெய் இருப்புகளை கொண்ட நாடுகளில் உலகிலேயே முதல் இடத்தில் உள்ளது. மேற்கு ஆசிய நாடான சவுதி அரேபியா இரண்டாம் இடத்தில் தான் உள்ளது.
முதலிடம்
'ஆயில் அண்டு காஸ்' என்ற பத்திரிகை 2023ல் ஒரு தரவை வெளியிட்டது. அதன்படி உலகளவில் 1.73 லட்சம் கோடி பீப்பாய் அளவுக்கு எண்ணெய் இருப்பு உள்ளது. ஒரு பீப்பாய் என்பது 160 லிட்டர்.
வெனிசுலா 30,300 கோடி பீப்பாய் இருப்புடன் முதலிடத்தில் உள்ளது. சவுதி அரேபியா 26,700 கோடி பீப்பாய்களுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது.
ஈரான் 20,800 கோடி பீப்பாய்களுடன் மூன்றாம் இடத்திலும், கனடா 16,300 கோடி பீப்பாய்களுடன் நான்காம் இடத்திலும் உள்ளன. இந்த நான்கு நாடுகளின் இருப்பு உலகின் மொத்த எண்ணெய் இருப்பில் பாதிக்கும் மேல். இந்த வரிசையில் அமெரிக்கா 5,500 கோடி பீப்பாய்களுடன் ஒன்பதாவது இடத்தில் உள்ளது.
வெனிசுலாவிடம் கச்சா எண்ணெய் இருப்பு கொட்டி கிடந்தாலும் அந்நாடு அதை ஏற்றுமதி செய்து ஈட்டும் வருவாய் ஆண்டுக்கு 35,000 கோடி ரூபாய் என்ற அளவிலேயே உள்ளது. வெனிசுலாவுடன் ஒப்பிடுகையில் குறைந்த எண்ணெய் இருப்பு உடைய சவுதி - 15 லட்சம் கோடி ரூபாய்; அமெரிக்கா - 11 லட்சம் கோடி ரூபாய்; ரஷ்யா - 10 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு எண்ணெய் ஏற்றுமதி மூலம் வருவாய் ஈட்டுகிறது.
அமெரிக்காவின் பொருளாதார தடைகள் காரணமாக வெனிசுலாவின் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் நவீனமடையாமல் உள்ளன. எனவே அவர்களால் அதை வைத்து வருவாய் ஈட்ட முடியவில்லை.
கச்சா எண்ணெயில் இலகு ரகம், கன ரகம் என இரு வகைகள் உள்ளன. அமெரிக்காவில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளுக்கு கனமான கச்சா எண்ணெய்கள் தேவை. ஆனால் அமெரிக்காவில் கிடைப்பவை இலகு ரகம். அதற்கு நேர்மாறாக வெனிசுலாவில் கன ரக கச்சா எண்ணெய் வளம் ஏராளமாக உள்ளது.
நாடு வளமடையும்
வெனிசுலா அதிபரை கைது செய்த பின் அமெரிக்க அதிபர் டிரம்ப் நடத்திய செய்தியாளர்கள் சந்திப்பின் போது, போதைப்பொருள் ஒழிப்பு பற்றி ஒரு சில வார்த்தைகள் பேசிவிட்டு கச்சா எண்ணெய் வளம் பற்றி விரிவாக பேசினார்.
“வெனிசுலாவின் எண்ணெய் சுத்திகரிப்பு தொழில் தோல்வியடைந்த ஒன்று. நம்மிடம் உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் உள்ளன. ''அவற்றை வெனிசுலாவுக்கு அனுப்புவோம். அவர்கள் கட்டமைப்பை சரி செய்து ஏற்றுமதியை அதிகரிப்பர். இதன் மூலம் அந்நாடு வளமடையும்,” என்றார்.
இவை அனைத்தையும் குறிப்பிட்ட மதுரோவின் ஆதரவாளர்கள், 'அமெரிக்காவின் குறி போதைப்பொருள் கிடையாது; வெனிசுலாவின் கனரக கச்சா எண்ணெய் வளம் தான்' என கூறுகின்றனர்.
பேராசை பெரு நஷ்டம். அமெரிக்கா அழியும் நேரம்.
பலர் அறிந்த உண்மைதான் அது.. அமெரிக்காவைத் தட்டிக்கேட்பார் யாருமில்லை.
இதுதான் முற்றிலும் உண்மை.
ஸ்ரீலங்கா, நேபாள், பங்களாதேஷ், மியான்மர் நாடுகளின் ஸ்திரத்தன்மையையும் குலைத்து, இந்தியாவின் வளர்ச்சியைக் குறைக்கப் பாடுபடுவதும், இந்த அமெரிக்காதான். முதலில் அவர்களை ஓரங்கட்ட வேண்டும்.
கச்சா அதிகம் இருப்பதால் அந்த நாடு என்றும் முன்னேற வழியில்லாமல் வைத்து இருக்கிறது அமெரிக்க நிர்வாகம். பணத்தின் மதிப்பு தரை மட்டத்தில் இருக்கிறது. வேலை கிடைக்காமல் அண்டை நாடான கொலம்பியாவில் சென்று கேடுகெட்ட தொழில் செய்துதான் பலர் வயிற்றை கழுவுகிறார்கள். முழுவதும் போதை வியாபாரம் செய்யும் கொலம்பியா கூட அமெரிக்காவுக்கு பிரச்சினை இல்லை.
இராக், லிபிய, என்று வயிறுகழுவிய அமெரிக்கா, வரி விதிப்பு செய்து தாத்தா வேலை செய்ய பார்த்தது. இந்தியா, சீன நாடுகளின் எதிர்பால் சண்டித்தனம் கைகூடவில்லை, அதுக்கு இப்போ பலியானது வெனின்சுலா. இந்த வயிறுகழுவி முடிந்ததும், அடுத்து ஆசிய நாட்டில் தான் டிரம்ப் கைவைப்பார்,
எப்படிங்க போதைவியாபாரிகளுடன் மோதுவது, அமெரிக்கா பல மிலையன் மக்களை அடைக்கி வைத்திருப்பதே போதையில்தான், போதை தெளிந்தால் அரசுக்கு ஆப்பு.மேலும்
-
'பொங்கல் பரிசு தொகைக்காக பயிர் கடன் பணம் மடைமாற்றமா?'
-
வசனம் பேசிக்கொண்டு 'ஷூட்டிங்' தான் நடத்துகிறார்
-
மைனாரிட்டி பெயரை சொல்லி தி.மு.க.,வினர் ஏமாற்றுகின்றனர்
-
அரசில் பங்கு இல்லாவிட்டால் அரசியல் கட்சி எதற்கு?
-
312 சவரன் நகை மாயம்; தனி நீதிபதி விசாரணை தேவை
-
தி.மு.க.,வின் கனவு ஒருபோதும் பலிக்காது