சென்னை, கோவை, பெங்களூருவில் இருந்து முன்பதிவில்லா ரயில்கள்: தென்மாவட்ட மக்கள் எதிர்பார்ப்பு
ஸ்ரீவில்லிபுத்துார்: பொங்கல் தொடர் விடுமுறையால் சென்னை, கோவை, பெங்களூருவில் இருந்து இயங்கும் அனைத்து ரயில்களிலும் அதிக வெயிட்டிங் லிஸ்ட் இருப்பதால் ஜன. 10 முதல் ஜன.20 முடிய முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில்களை, மதுரை, நாகர்கோவில், ராமேஸ்வரம், செங்கோட்டை, துாத்துக்குடி போன்ற நகரங்களுக்கு இயக்க வேண்டும் என தென் மாவட்ட மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
தென்மாவட்டங்களைச் சேர்ந்த பல லட்சம் மக்கள் சென்னை, பெங்களூரு, கோவை நகரங்களில் வசித்து வருகின்றனர்.
இவர்கள் தற்போதைய பொங்கல் தொடர் விடுமுறையை முன்னிட்டு குடும்பத்துடன் சொந்த ஊருக்கு வந்து செல்ல திட்டமிட்டுள்ளனர்.
அதற்காக கடந்த 2 மாதத்திற்கு முன்பே ரயிலில் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்துள்ளனர். இதனால் தற்போது சென்னை உள்ளிட்ட ஊர்களில் இருந்து இயக்கப்படும் அனைத்து ரயில்களிலும் வெயிட்டிங் லிஸ்ட் நிலையை கடந்து முன்பதிவு செய்ய முடியாத ரெக்ரீட் நிலையை எட்டி உள்ளது. நேற்று முன் தினம் அறிவிக்கப்பட்ட ஈரோடு- --சென்னை- --செங்கோட் டை சிறப்பு ரயிலிலும் நேற்று காலையே வெயிட்டிங் லிஸ்ட் நிலையை கடந்து விட்டது.
ஜன. 10 முதல் 20 வரை தென் மாவட்ட நகரங்களுக்கு வந்து செல்லும் அனைத்து ரயில்களிலும் தினசரி 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் காத்திருக்கும் நிலை உள்ளது. தட்கலில் முன்பதிவு செய்ய சர்வர்கள் திணறுகி றது.
எனவே ஜன. 10 முதல் 15 வரை சென்னை, கோவை, பெங்களூருவில் இருந்து தென் மாவட்ட நகரங்களுக்கும், ஜன. 16 முதல் 20 வரை மறு மார்க்கத்திலும் முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாகும்.
மேலும்
-
'பொங்கல் பரிசு தொகைக்காக பயிர் கடன் பணம் மடைமாற்றமா?'
-
வசனம் பேசிக்கொண்டு 'ஷூட்டிங்' தான் நடத்துகிறார்
-
மைனாரிட்டி பெயரை சொல்லி தி.மு.க.,வினர் ஏமாற்றுகின்றனர்
-
அரசில் பங்கு இல்லாவிட்டால் அரசியல் கட்சி எதற்கு?
-
312 சவரன் நகை மாயம்; தனி நீதிபதி விசாரணை தேவை
-
தி.மு.க.,வின் கனவு ஒருபோதும் பலிக்காது