தி.மு.க., அரசின் ஊழலால் முதலீட்டாளர்கள் அச்சம் பா.ம.க., அன்புமணி புகார்

சென்னை: பா.ம.க., தலைவர் அன்புமணி நேற்று வெளியிட்ட அறிக்கை:

ஒவ்வொரு மாநிலமும் எந்த அளவுக்கு முதலீடுகளை ஈர்க்கிறதோ, அந்த அளவுக்கு அம்மாநிலத்தில் முதலீட்டுக்கு சாதகமான சூழல் நிலவுகிறது என்பது பொருள்.

அந்த வகையில், கடந்த 2025 ஏப்., முதல் டிச., வரை, அரசு மற்றும் தனியார் முதலீடுகளுக்கான உறுதிமொழிகளை ஈர்த்த மாநிலங்களின் பட்டியலில், முதல் ஐந்து இடங்களில் தமிழகம் இடம் பெறவில்லை.

இந்த பட்டியலில், கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும், ஆந்திர மாநிலம் 25.30 சதவீத முதலீட்டு உறுதிமொழிகளுடன் முதலிடம் பிடித்துள்ளது.

அதை தொடர்ந்து ஒடிஷா 13.10 சதவீதம்; மஹாராஷ்டிரா 12.80 சதவீதம்; தெலுங்கானா 9.50 சதவீதம்; குஜராத் 7.10 சதவீதம் என அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன.

தமிழகம் வெறும் 4.9 சதவீத முதலீட்டு உறுதிமொழிகளுடன் ஆறாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

தமிழகத்தில் முதலீடு செய்ய, ஏதேனும் நிறுவனங்கள் விரும்பினால், மொத்த முதலீட்டில் கணிசமான பகுதியை, ஆட்சியாளர்களுக்கு லஞ்சம் தர வேண்டியிருக்கிறது என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

தமிழகத்திற்கு வர முதலீட்டாளர்கள் அஞ்சுவதற்கு, இது தான் காரணம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement