பள்ளிகள் இன்று மீண்டும் திறப்பு: ஆசிரியர்கள் போராட்டம் நீடிப்பு
சென்னை: அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து, இன்று பள்ளிகள் திறக்கப்படும் நிலையில், இடைநிலை ஆசிரியர்கள் வேலைநிறுத்தம் தொடர்வதால், அரசு பள்ளி மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படும் நிலை உருவாகி உள்ளது.
அரசு பள்ளிகளில், ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, இடைநிலை ஆசிரியர்கள் பாடம் கற்பிக்கின்றனர். தமிழகத்தில், 60,000க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் பணியாற்றும் நிலையில், 2006 ஜூன் மாதத்துக்கு முன் பணியில் சேர்ந்தவர்களுக்கும், அதன்பின் பணியில் சேர்ந்தவர்களுக்கும் வெவ்வேறு ஊதிய விகிதம் உள்ளது.
இந்த வேறுபாட்டை களைந்து, சம வேலைக்கு சம ஊதியம் என்ற நிலையில், அனைவருக்கும் ஒரே மாதிரியான அடிப்படை சம்பளத்தை நிர்ணயிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, சென்னையின் பல்வேறு பகுதிகளில் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
நேற்று, 10வது நாளாக, சென்னை ஓமந்துாரார் அரசு மருத்துவமனை முன் உள்ள சுவாமி சிவானந்தா சாலையில், 1,000க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின், அவர்கள் கைது செய்யப்பட்டு, பல்வேறு மண்டபங்களில் அடைக்கப்பட்டனர்.
இதுகுறித்து, இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தின் மாநில பொதுச்செயலர் ராபர்ட் கூறியதாவது: எங்களுக்கு தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்து விட்டு, தற்போது அரசு ஏமாற்றுகிறது. அதற்காக போராடும் எங்களுக்கு, பள்ளிக்கல்வி இயக்குநரகத்தில் இடம் தர மறுக்கிறது.
இதுவரை, எங்களிடம் யாரும் பேச்சு நடத்தவில்லை. அதனால், இன்று பள்ளி திறக்கும் நிலையில், ஆசிரியர்கள் விடுப்பு எடுத்து, அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் போராடுவர். அரசு தொடர்ந்து பிடிவாதம் பிடித்தால், நாங்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.
சமத்துவம் எங்கே? சம வேலை சம ஊதியம் எங்கே. தொழிலாளர் நலத்துறை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை
தமிழக அப்பா உடனடியாக இவர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்து இவர்களுக்கும் ஒரு பெட்டிய கொடுங்க. ஜக்டோக்கு மட்டும் கொடுத்தா எப்படி
வாழ்க தமிழ் நாடு வளமுடன்மேலும்
-
இடைநிலை ஆசிரியர்கள் 6வது நாளாக காத்திருப்பு போராட்டம்
-
எல்லமேடு பகுதியில் வங்கி இல்லாததால் மக்கள் அவதி
-
வரத்து அதிகரித்ததால் தக்காளி விலை சரிந்தது: இல்லத்தரசிகள் மகிழ்ச்சி
-
அனைத்து பணியாளர் நலச்சங்கத்தினர் 2வது நாளாக காத்திருப்பு போராட்டம்
-
உயர்ந்தது பூக்கள் விலை
-
பொங்கல் திருவிழாவையொட்டி பானை, கோலப்பொடி விற்பனை