உயர்ந்தது பூக்கள் விலை



பொங்கல் திருவிழா காரணமாக, கரூரில் ஒரு கிலோ மல்லிகை பூ, 3,000 ரூபாய் வரை விற்றது.
வரும், 14ல் பொங்கல் திருவிழா தொடங்குகிறது. தை மாதம் தொடங்கிய பிறகு திருமணம், வீடு கிரக பிரவேசம் உள்ளிட்ட பல்வேறு சுப நிகழ்ச்-சிகள் நடக்கும்.


இதனால், மலர் மாலை, பூக்களுக்கு ஆர்டர்கள் கொடுக்கும் பணியும் தொடங்கியுள்ளது. மேலும், கடும் பனிப்பொழிவு காரணமாக பூக்கள் வரத்து குறைந்துள்ளது, இதனால், ஒரு கிலோ மல்லிகை பூ, 2,500 ரூபாய் முதல், 3,000 ரூபாய் வரை நேற்று விற்றது. கடந்த வாரம், 1,500

ரூபாய் முதல், 2,000 ரூபாய் வரை மல்லிகை பூ விற்பனையானது. அதேபோல், 1,000 ரூபாய்க்கு விற்ற முல்லை பூ ஒரு கிலோ, 2,000 ரூபாய்க்கும், 1,000 ரூபாய்க்கு விற்ற ஜாதி மல்லி பூ, 1,500 ரூபாய்க்கும் விற்றது.


மேலும் ரோஜா கிலோ, 200 ரூபாய், சம்பங்கி, 250 ரூபாய், செவ்வந்தி, 100, மரிக்கொழுந்து ஒரு கட்டு, 100, துளசி நான்கு கட்டு, 60 ரூபாய்க்கு விற்-றது.

Advertisement