அனைத்து பணியாளர் நலச்சங்கத்தினர் 2வது நாளாக காத்திருப்பு போராட்டம்

கரூர்: தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம், அனைத்து பணியாளர்கள் நலச்சங்கத்தினர், நேற்று இரண்டாவது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.


தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பணியா-ளர்களுக்கும், அடிப்படை ஊதிய உயர்வு வழங்க வேண்டும். நகர்ப்புற பணியாளர்களுக்கு பயணப்படி வழங்க வேண்டும். பெண் பணியாளர்
களுக்கு மகப்பேறு விடுப்பு ஊதியத்துடன் வழங்க வேண்டும்.


ஈட்டிய விடுப்பு நிதி வழங்க வேண்டும். வெளி-யேற்றப்பட்ட பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் உள்ளிட்ட, 14 அம்ச கோரிக்-கைகளை வலியுறுத்தி, பணியாளர்கள் நேற்று முன்தினம் காத்திருப்பு போராட்டத்தை துவக்-கினர்.கரூரில் வட்டார போக்குவரத்து அலுவலகம் முன், மாவட்ட துணைத்தலைவர் கீதா தலைமையில், காத்திருப்பு போராட்டம் தொடங்கியது. நேற்று, இரண்டாவது நாளாக காத்திருப்பு போராட்டம் நீடித்தது.
அதில், 25க்கும் மேற்பட்ட பணியாளர்கள், அரசு ஊழியர் சங்கத்தினர் பங்கேற்றனர்.

Advertisement