பொங்கல் திருவிழாவையொட்டி பானை, கோலப்பொடி விற்பனை

கரூர்: பொங்கல் திருவிழாவையொட்டி, கரூரில் கலர் மண் பானை, கோலப்பொடி ஆகியவை விற்ப-னைக்கு குவித்து வைக்கப்பட்டுள்ளது.


தமிழர்களின் முக்கிய பண்டிகையான பொங்கல் வரும், 14ல் போகியுடன் தொடங்குகிறது. இதை-யடுத்து, கரூர் காமராஜ் தினசரி மார்க்கெட், ஜவஹர் பஜார், தான்தோன்-றிமலை, வெங்கமேடு, காந்தி கிராமம் உள்ளிட்ட பகுதிகளில் கலர் மண் பானைகள், 200
ரூபாயில் இருந்தும், கலர் கோலப்பொடி ஒரு பாக்கெட், 10 ரூபாய்க்கும் விற்பனைக்கு குவிந்துள்ளது.


அதேபோல், மாட்டு பொங்கல் தினத்தில் கால்ந-டைகளுக்கு பயன்படுத்தப்படும் மூக்காணங்
கயிறு, தாம்பு கயிறு, மணி சங்கு, திருகாணி, சாட்டைகள், கழுத்து மணி, நெத்தி மணி ஆகி-யவை மதுரை மற்றும் சேலம் செவ்வாய்-பேட்டை பகுதிகளில் இருந்து, கரூருக்கு விற்ப-னைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.


கால்நடை அலங்கார பொருட்கள், 100 ரூபாய் முதல், 500 ரூபாய் வரை நேற்று விற்பனை செய்-யப்பட்டது.

Advertisement