இ - பைலிங் முறைக்கு எதிராக  வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு

1

திருப்பூர்: 'இ - பைலிங் கட்டாய நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து, வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு போராட்டம், ஜன., 18 வரை தொடரும்' என, தமிழகம் மற்றும் புதுச்சேரி அனைத்து வக்கீல் கூட்டமைப்பினர் முடிவெடுத்துள்ளனர்.

நேற்று முன்தினம் நா மக்கல்லில் நடந்த செயற்குழு கூட்டத்தில், புறக்கணிப்பு போராட்டம், ஜன., 18 வரை தொடரும். கோர்ட்டில், சாட்சிகளை காணொளி வாயிலாக விசாரிக்க ஏதுவாக தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசாணையை திரும்ப பெற வேண்டும்.

கட்டாய இ - பைலிங் முறையை ரத்து செய்ய கோரி, கூட்டமைப்பு சென்னை ஐகோர்ட் டில் தாக்கல் செய்த ரிட் மனுவை உடனடியாக விசாரணைக்கு எடுக்க வேண்டும் .

அடுத்தகட்ட நடவடிக்கையாக, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியை நேரில் சந்தித்து முறையிடுவது; ஜன., 12ல் அனைத்து கலெக்டர் அலுவலகங்கள் முன் முற்றுகை போராட்டம் நடத்துவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தி ருப்பூர் மாவட்டத்தில் பணியாற்றும் வக்கீல்கள், தங்கள் புறக்கணிப்பு போராட்டத்தை தொடருவதாக தெரிவித்துள்ளனர். கடந்த டிச., 3ல் துவங்கிய கோர்ட் புறக்கணிப்பு போராட்டம் ஒரு மாதத்துக்கும் மேலாகியும் தொடர்கிறது.

Advertisement