பைக் - சரக்கு ஆட்டோ நேருக்கு நேர் மோதல்; கல்லுாரி மாணவர்கள் உள்பட 3 பேர் பலி



நங்கவள்ளி: சேலம் அருகே, பைக் - சரக்கு ஆட்டோ நேருக்கு நேர் மோதி-யதில், கல்லுாரி மாணவர்கள் உள்பட மூன்று பேர் பலியாகினர்.


சேலம் மாவட்டம் நங்கவள்ளி அருகே வனவாசி - ஜலகண்டா-புரம் பிரதான சாலை, பாப்பாத்தி காட்டு வளவில், நேற்று இரவு, 9:50 மணிக்கு, 'யமஹா ஆர்-15' பைக் - சரக்கு ஆட்டோ ஆகிய இரு வாகனங்களும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.


சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் திரண்டனர். அதில் சம்பவ இடத்தில், 3 பேர் உயிரி-ழந்னர். உடல்களை கைப்பற்றி நங்கவள்ளி போலீசார் விசாரிக்-கின்றனர்.


இதுகுறித்து போலீசார் கூறியதாவது:
ஜலகண்டாபுரத்தில் இருந்து பால் ஏற்றிக்கொண்டு சரக்கு ஆட்டோ நங்கவள்ளி நோக்கி வந்து கொண்டிருந்தது. நங்கவள்-ளியில் இருந்து இடைப்பாடி நோக்கி, கல்லுாரி மாணவர்கள் பைக்கில் சென்றுகொண்டிருந்தனர். இரு வாகனங்களும் நேருக்கு நேர் மோதியதில், பைக்கில் வந்த, இடைப்பாடி, இருப்பாளி அருகே ராமகவுண்டனுாரை சேர்ந்த, தனியார் கல்லுாரி, பி.காம்., 3ம் ஆண்டு மாணவர் மோகன்குமார், 20, தனியார் கல்லுாரி, பி.இ., 2ம் ஆண்டு மாணவர் சஞ்சய்பாரதி, 20, சரக்கு ஆட்-டோவில் வந்த, மேச்சேரி, செட்டிக்காரச்சியூரை சேர்ந்த விமல், 19, ஆகியோர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர்.


தவிர சரக்கு ஆட்டோவில் வந்த, செட்டிக்காரச்சியூர் விஜயரா-கவன், 18, ராமகிருஷ்ணன், 21, காயம் அடைந்தனர். அவர்களை மீட்டு, சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினோம். சரக்கு ஆட்டோ டிரைவரின் அலட்சியமே விபத்துக்கு காரணம் என, முதல்கட்ட விசாரணையில் தெரிந்தது.இவ்வாறு அவர்கள் கூறினர்.


மேலும் மோதிய வேகத்தில் ஒருவரது உடல், சரக்கு வேனின் முன்புற கண்ணாடியில் சிக்கி தொங்கி கொண்டிருந்தது. இச்சம்ப-வத்தால் அப்பகுதியில் அரை மணி நேரத்துக்கு மேல் போக்குவ-ரத்து பாதிக்கப்பட்டு வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு ஆளாகினர்.

Advertisement