அ.தி.மு.க.,வில் விருப்ப மனு; வீரபாண்டி தொகுதியில் அதிகம்



பனமரத்துப்பட்டி: அ.தி.மு.க.,வின், சேலம் புறநகர் மாவட்டத்தில், 8 சட்டசபை தொகுதிகள் உள்ளன. அதில் அ.தி.மு.க., சார்பில் போட்டியிட, ஏராளமானோர் விருப்ப மனு அளித்தனர். குறிப்பாக வீரபாண்டி தொகுதியில் போட்டியிட அதிகபட்சம், 56 பேர் விருப்ப மனு அளித்துள்ளனர்.

குறிப்பாக, அத்தொகுதி, 'சிட்டிங்' எம்.எல்.ஏ., ராஜமுத்து, முன்னாள் எம்.எல்.ஏ., மனோன்மணி, வக்கீல் மணிகண்டன், பனமரத்துப்பட்டி மேற்கு ஒன்றிய செயலர் ஜெகநாதன், மல்லுார் நகர செயலர் பழனிவேலு உள்பட, 56 பேர் விருப்ப மனு அளித்-துள்ளனர்.
இதற்கு அடுத்து, மேட்டூர் தொகுதிக்கு, 48 பேர், சங்ககிரிக்கு, 43 பேர், கெங்கவல்லிக்கு, 39 பேர், ஓமலுாருக்கு, 30 பேர், ஏற்கா-டுக்கு, 30 பேர், ஆத்துாருக்கு, 26 பேர், இடைப்பாடி தொகு-திக்கு, 3 பேர் என, அக்கட்சியினர் விருப்ப மனு அளித்துள்ளனர்.

Advertisement